பக்தி பாடல்கள்

2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்

கணிப்பு
ஜோதிட மாமணி
முருகு பாலமுருகன் M.A.astro.
வடபழனி,சென்னை-600026.
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்


புத்தாண்டு பலன்  2014 மேஷம்
மேஷம் (அஸ்வினி, பரணி,கிருத்திகை & 1ம் பாதம்)

நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே ! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆண்டு உங்களுக்கு சற்று பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். உங்கள் ஜென்ம ராசியில் கேதுவும், 7இல் சனி & ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் கணவன்  மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். தற்போது ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சரிக்கும் குரு பகவான் வரும் 13.6.2014 முதல் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். 21.6.2014இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 6ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது மூலம் எதையும் எதிர் கொண்டு வெற்றிப்பெறக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் கடனில்லாத கண்ணியமான வாழ்க்கையை வாழ்வீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப்பலன்களை அடைய முடியும். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது நல்லது.

தேக ஆரோக்கியம்

  உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்ட படியே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட முடியாத அளவிற்கு மனக்குழப்பங்களும், நிம்மதி குறைவும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைக்க முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை

  குடும்பத்தில் கணவன்&மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியம் நடைபெறுவதில் தடைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.

கொடுக்கல் வாங்கல்

  பண வரவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருக்காது என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தானிருக்கும்
.
தொழில் வியாபாரிகளுக்கு

    கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர் நீச்சல் போட்டாலும் முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

    பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர் பார்த்த அளவிற்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன் படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமலிருப்பதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அரசியல்வாதிகளுக்கு

  மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல் படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காதிருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு

    பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருப்பது நல்லது.

பெண்களுக்கு

    உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது மிகவும் நல்லது.

படிப்பு

  கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும்.

ஸ்பெகுலேஷன்

    லாட்டரி, ரேஸ், ஷேர், போன்றவற்றில் பெரிய தொகைளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.

ஜனவரி

    ஜென்ம ராசியில் கேதுவும், 7&ஆம் வீட்டில் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6&ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 10&இல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். 3&இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற கூடிய வாய்ப்புகளும் கை கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. தினமும் விநாயகப் பெருமானை வழிபடவது நல்லது.

சந்திராஷ்டமம் ; 25.01.2014 மாலை 6.00 மணி முதல் 27.1.2014 இரவு 09.32 மணி வரை

பிப்ரவரி

    நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதாலும் 10&இல் சூரியனும் புதனும் சஞ்சாரம் செய்வதாலும் இம்மாதம் தொழில் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 22.02.2014 அதிகாலை 01.53 மணி முதல் 24.02.2014 காலை 05.33 மணி வரை.

மார்ச்

    எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம  ராசிக்கு 3&இல் குருவும், 7&இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளும், எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் உண்டாகும் என்றாலும், 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் சஞ்கரிப்பதால் எதிர்பார்க்கும் லாபங்கள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளை சமாளிக்கும் அளவிற்கு ஆற்றல் உண்டாகும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 21.03.2014 காலை 09.38 மணி முதல் 23.03.2014 மதியம் 01.27 மணி வரை

ஏப்ரல்

    நிறைய பொது அறிவும், பரந்த மனப்பான்மையும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் கேதுவும் 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 6&இல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 7&இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதாலும் உங்களுக்குள்ள பிரச்சனைகள் எதிர்ப்புகள் யாவும் விலகி குடும்பத்தில் முன்னேற்றமான நிலையினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும், பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 17.04.2014 மாலை 05.22 மணி முதல் 19.04.2014 இரவு 09.21 மணி வரை.

மே

    தன்னை நம்பியவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காப்பாற்றக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6&ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 7&இல் உள்ள சனி வக்ர கதியிலிருப்பதாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலும், உங்களின் பலம், வலிமையும் கூடும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களின் ஆதரவுகள்  ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படுவர்கள். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சனைகள் விலகி வர வேண்டிய லாபங்கள் வந்து சேரும். தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 15.05.2014 அதிகாலை 01.16 மணி முதல் 17.05.2014 அதிகாலை 05.27 மணி வரை.

ஜீன்

  எந்த இடையூறுகளையும் பொறுமையோடு தாங்கும் உள்ளம் கொண்ட உங்களுக்கு 6&இல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், மாத பிற் பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதாலும்  எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் ஒரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் லாபங்களைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. 13&ஆம் தேதி முதல் குரு 4&இல் சஞ்சரிக்க விருப்பதாலும் பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமலிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். 21&ஆம் தேதி முதல் ராகு 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நற்பலனை உண்டாகும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 11.06.2014 காலை 09.13 மணி முதல் 13.06.2014 மதியம் 01.35 மணி வரை.

ஜீலை

  அகங்கார குணமும், வாக்கு சாதுர்யமும் கொண்ட உங்களுக்கு இம் மாத முற்பாதி வரை சூரியன் 3&ஆம் வீட்டிலும், செவ்வாய் 6&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குரு 4&இல் சஞ்சரிப்பதால் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் 08.07.2014 இரவு 09.14 மணி முதல் 10.07.2014 இரவு 09.97 மணி வரை.

ஆகஸ்ட்

  தைரியமும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4&ஆம் வீட்டில் சூரியனும் குருவும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும், ராகு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போதும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 05.08.2014 காலை 01.09 மணி முதல் 07.08.2014 காலை 05.58 மணி வரை.

செப்டம்பர்

  வசீகரமான உடலமைப்பு கொண்ட உங்களுக்கு இம்மாதம் 6&ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் விரோதிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள் பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். பொன் பொருள் சேரும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதால் எதிலும் ஒற்றுமையுடன் செயல் படமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 01.09.2014 காலை 08.58 மணி முதல் 03.09.2014 மதியம் 01.54 மணி வரை மற்றும் 28.09.2014 மாலை 04.37 மணி முதல் 30.09.2014 இரவு 09.46 மணி வரை.

அக்டோபர்

  சமயத்திற்கேற்றார் போல் வளைந்து கொடுக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் ராகுவும் சூரியனும் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும் என்றாலும், சனி 7&லும், செவ்வாய் 9&லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் எதிர்பார்த்த படி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள், முருகப்பெருமானை வழிபடுவதால் நற்பலன் கிட்டும்.

சந்திராஷ்டமம் 25.10.2014 இரவு 12.17 மணி முதல் 28.10.2014 காலை 05.42 மணி வரை..

நவம்பர்

    புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவிசாய்க்காத பண்பு கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 6&இல் ராகுவும், 9&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். 4&இல் குரு சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. 7&ஆம் வீட்டில் சூரியனும், சனியும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில்  அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல் படவும், தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 22.11.2014 காலை 08.05 மணி முதல் 24.11.2014 பகல் 01.41 மணி வரை.

டிசம்பர்

  தாணுண்டு தன் காரியம் உண்டு என செயல்பட கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டில் ராகுவும், 10&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த வித எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். ஜென்ம ராசிக்கு 8&இல் சூரியன் சஞ்சரிப்பதும், இம்மாதம் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் 8&ஆம் வீட்டிற்கு மாறுதலாகி அஷ்டம சனி தொடங்கவிருப்பதும் சற்று சாதக மற்ற அமைப்பு என்பதால் எந்த வொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 19.12.2014 மதியம் 03.48 முதல் 21.12.2014 இரவு 09.42 மணி வரை.

அசுவனி

  அசுவனி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி கேது பகவான் ஆவார். அதிகாரத்திற்கு பெயர் பெற்ற செவ்வாயின் ராசியில் பிறந்துவிருப்பதால் மிகவும் துணிவும் தைரியமும் உடன் பிறந்ததாக இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு எதிலும் சற்று ஏற்ற இறக்கமானப் பலன்களே உண்டாகும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பது, முன்கோபத்தை குறைப்பது, ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது போன்றவற்றின் மூலமும் அனுகூலப் பலனை அடைய முடியும். சுப காரியங்கள் தாமதப்படும்.

பரணி

  பரணி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்த்திராதிபதி சுக்கிர பகவானாவார். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் அழகாக உடை உடுத்துவது அணிகலன்களை அணிந்து கொள்வது போன்றவற்றில் ஈடுபாடு அதிகமிருக்கும். இந்த வருடத்தில் உங்களின் பொருளாதார நிலை சுமாராகத் தானிருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்கள் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் நிங்கள் நிதானத்தைக் கடை பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள்.

கிருத்திகை  1ம் பாதம்

     கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவானாவார். சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் எதையும் வெளிப்படையாக பேசும் குணமும், முன் கோபமும் அதிகமிருக்கும். இந்த வருடம் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல் பட்டால் மட்டுமே தேவையற்றப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர் பார்த்த லாபத்தினை அடை சற்று தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் -  1,2,3,9,10,11,12
நிறம்  -  ஆழ் சிவப்பு 
கிழமை  - செவ்வாய்
கல் -  பவளம்
திசை  - தெற்கு 
தெய்வம் -  முருகன்

பரிகாரம்

  மேஷ  ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது முயற்சி ஸ்தானமான 3இல் சஞ்சரிக்கும் குருபகவான் வரும் 13.6.2014 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வதும், குரு ப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் நல்லது. இந்த ஆண்டு முழுவதும் 7இல் சனி சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வதும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. ராகுபகவான் 21.6.2014 வரை 7இல் சஞ்சரிப்பதால் துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

புத்தாண்டு பலன்  2014 ரிஷபம்


ரிஷபம்   கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
     
தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் பிடிவாத குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு பொற்காலம் என்று கூறினால் அது மிகையாகாது. ஆண்டின் முற்பாதி வரை குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சனியும் ராகுவும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும். தொழில் வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், எதிர்பார்க்கும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். 13.6.2014 முதல் குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிலும் வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள்.

தேக ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும்.

குடும்ப பொருளாதார நிலை
  திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தியும் உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கொடுக்கல் வாங்கல்
    பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சனைகளும் தீர்வடையும். இது வரை இருந்து வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளாலும் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பும் பெருகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
    பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய கிளைகளையும் நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு
    பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும்.

அரசியல்வாதிகளுக்கு
    பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறு சிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் பொருளாதார நிலை உயர்வாகவே இருக்கும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். புதிய நவீன முறைகளை பயன்படுத்தி விசைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு
    உடல் நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல் பட முடியும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள் போன்ற யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். மகிழ்ச்சி நிலவும்.

படிப்பு
  மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

ஸ்பெகுலேஷன்
  லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எளிதில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபங்களைப் பெற முடியும்.

ஜனவரி
  இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு, 2இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதாலும், சூரியன் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படுவதும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவம் நல்லது. 6ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளித்து அபிவிருத்தியைப் பெறுக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவதால் நற்பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம் 31.12.2013 மதியம் 01.22 மணி முதல் 02.01.2014 மதியம் 03.50 மணி வரை மற்றும் 27.01.2014 இரவு 09.32 மணி முதல் 29.01.2014 இரவு 12.04 மணி வரை

பிப்ரவரி
  எல்லோரையும் வசியப்படுத்தக் கூடிய தோற்றம் கொண்ட உங்களுக்கு சனியும், ராகுவும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. புதன் 10&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 24.02.2014 காலை 05.33 மணி முதல் 26.02.2014 காலை 08.08 மணி வரை.

மார்ச்
  எளிதில் உணர்ச்சி வசப்படாத ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6&ஆம் வீட்டில் சனியும் ராகுவும், 10&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக மேற்க் கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.03.2014 மதியம் 01.27 மணி முதல் 25.03.2014 மாலை 04.04 மணி வரை.

ஏப்ரல்
  சுய நலமில்லாமல், தியாக மனப்பான்மையுடன் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 10&இல் சுக்கிரனும் 11&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகளும் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 19.04.2014 இரவு 09.21 மணி முதல் 21.04.2014 இரவு 12.07 மணி வரை.

மே
  நேர்மையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 6&இல் சனி ராகுவும், சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 17.05.2014 அதிகாலை 05.27 மணி முதல் 19.05.2014 காலை 08.18 மணி வரை.

ஜீன்
  சாந்தமும், சகிப்புத் தன்மையும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2லும் ராகு 6&லும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவுள்ளார். இதனால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல் படுவது நல்லது. 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வாழ்வில் மேன்மையான பலன்களே உண்டாகும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நற்பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம் 13.06.2014 மதியம் 01.35 மணி முதல் 15.06.2014 மாலை 04.21 மணி வரை.

ஜீலை
    தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. இம்மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டிலும், செவ்வாய் 6&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபாடுத்தும் போது சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். கடன்கள் குறையும். சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 10.07.2014 இரவு 09.47 மணி முதல் 12.07.2014 இரவு 12.52 மணிவரை.

ஆகஸ்ட்
    பிடிவாத குணமும், பிறருக்கு அடி பணியாத ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியனும், 6&இல் செவ்வாயும் சனியும் சஞ்சாரம் செய்வதால் இம்மாதமும் நினைத்ததை சாதிப்பீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும், பூர்வீக சொத்துக்களாலும், புத்திர வழியிலும் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 07.08.2014 காலை 05.58 மணி முதல் 09.08.2014 காலை 09.04 மணி வரை.

செப்டம்பர்
    விரோதிகளை கண்டு பயப்படாத அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் 11&இல் கேது சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்றப் பாராட்டுதல்கள் கிட்டும். கடன்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 03.09.2014 மதியம் 01.54 மணி முதல் 05.09.2014 இரவு 05.09 மணிவரை.

அக்டோபர்
  முன் கோபமும், முரட்டுத் தனமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3&இல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமானப் பலன்களை ஏற்படுத்தினாலும், 6&இல் சனியும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். இது மட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியனும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் தேவை. முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்  30.09.2014 இரவு 09.46 மணி முதல் 03.10.2014 அதிகாலை 01.10 மணி வரை.மற்றும் 28.10.2014 காலை 05.42 மணி முதல் 30.10.2014 காலை 09.15 மணி வரை.

நவம்பர்
    சாமர்த்தியமும், சாதுர்யமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 6&இல் சனி, சூரியனும் 11&இல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும். கொடுக்கல்&வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். 8&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடை பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தேவையற்றப் பயணங்களைத்  தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 24.11.2014 பகல் 01.41 மணி முதல் 26.11.2014 மதியம் 05.24 மணி வரை.

டிசம்பர்
    கஷ்ட நஷ்டங்களை தாங்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சனியும், 9&இல் செவ்வாயும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்குப் பெருகும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இம்மாதம் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி ஜென்ம ராசிக்கு 7&இல் சஞ்சரிப்பதால் விருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.12.2014 இரவு 09.42 மணி முதல் 24.12.2014 அதிகாலை 01.35 மணி வரை

கிருத்திகை 2,3,4ம் பாதங்கள்
  கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான். இது ரிஷப ராசிக்குரிய நட்சத்திர 2,3,4&ம் பாதங்களாகிறது. இந்த நட்சத்திரம் இரண்டு ராசிக்குரியதாகிறது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கக் கூடியதொரு காலமாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும். பொருளாதார நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது.

ரோகிணி
    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி  சந்திர பகவானாவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் எதையும் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய ஆற்றல் உடையவராக இருப்பீர்கள். இந்த வருடம் உங்களுக்கு தொட்டது துலங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்குவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறைவதோடு குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.

மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
  இந்த நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடுவதுடன் கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் நடந்தும் கொள்ளவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்  5,6,8,14,15,17,
நிறம்  வெண்மை, நீலம்,
கிழமை  வெள்ளி,சனி
கல்  வைரம்,
திசை  தென்கிழக்கு,
தெய்வம்  விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்
  ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13.06.2014 முதல் குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. 21.06.2014 முதல் சர்ப கிரகமான ராகு 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
புத்தாண்டு பலன்  2014மிதுனம்

மிதுனம்  மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்
     
வசீகரமான கண்களும், சிறந்த பேச்சாற்றலும் எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். இது மட்டுமின்றி சனியும் ராகுவும் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள், புத்திர வழியில் மனசஞ்சலங்கள் போன்றவற்றை எதிர் கொள்வீர்கள் என்றாலும் கேது லாபஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிப்பீர்கள். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 2&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பது நல்ல அமைப்பாகும். இதனால் உங்களுக்குள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வரும் 21.06.2014&இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 4லும் கேது 10லும் சஞ்சாரம் செய்யவிருப்பது ஒரளவுக்கு  சுமாரான அமைப்பாகும். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது அற்புதமான அமைப்பு- என்பதால் நினைத்தது நிறைவேறும்.

தேக ஆரோக்கியம்
  உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள், சற்று மந்த நிலை, கைகால் அசதி போன்றவை ஏற்படும். அஜீரண கோளாறுகளும் உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் எந்த வித மருத்துவ செலவுகளும் ஏற்படாது. உடனே சரியாக அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

குடும்பம் பொருளாதார நிலை
  இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், திருமணத் தடைகள் உண்டாகும் என்றாலும், ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்
  பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும், பிற்பாதியில் தாராள தன வரவுகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படும். நெருக்கடிகள் விலகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவற்றிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளையும் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

தொழில் வியாபாரிகளுக்கு
    இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறு சிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகளை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒற்றுமையுடனிருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் சற்று வேலை பளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதல் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு
  கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், கௌரவம் புகழ் யாவும் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரை காப்பாற்ற அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்தையும் சரி செய்ய முடியும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். தொழிலாளர்களின் உதவியும் கிடைக்கும்.

பெண்களுக்கு
  உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. ஆண்டின் முற்பாதிவரை பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், பிற்பாதியில் தாராள தன வரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் குடியேறும்.  திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

படிப்பு
  கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல் பட்டால் அடைய நினைத்த மதிப்பெண்களை அடைந்து விட முடியும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதரவுகளும் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

ஸ்பெகுலேஷன்
  இந்த ஆண்டின் முற்பாதி வரை லாட்டரி, ரேஸ்,ஷேர், போன்றவற்றில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். பிற்பாதியில் எதிலும் லாபத்தை அடையக் கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.

ஜனவரி
  கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் உங்களுக்கு இம்மாதம் ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயும் 7&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். லாபஸ்தானமான 11&இல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்&மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். பொது நலக் காரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். இம் மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 02.01.2014 மதியம் 03.50 மணி முதல் 04.01.2014 மாலை 06.18 மணி வரை 
மற்றும் 29.01.2014 இரவு 12.04 மணி முதல் 01.02.2014 அதிகாலை 02.28 மணி வரை

பிப்ரவரி
    ஜென்ம ராசியில் குருவும், 4&இல் செவ்வாயும், 8&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் டென்ஷன்களை சந்திப்பீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இம்மாதம் சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 26.02.2014 காலை 08.08 மணி முதல் 28.02.2014 காலை 10.29 மணி வரை

மார்ச்
    தந்திரமாக எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு இம்மாதம் பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து ஒரளவுக்கு விடுபடுவீர்கள். பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களும், புத்திரர்களால் மனசஞ்சலங்களும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 25.03.2014 மாலை 04.04 மணி முதல் 27.03.2014 இரவு 06.26 மணி வரை.

ஏப்ரல்
    உயரமான தேகமும், மெலிந்த உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சூரியனும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல் பட்டால் வீண் விரயங்களை குறைக்கலாம். இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.04.2014 இரவு 12.07 மணி முதல் 24.04.2014 அதிகாலை 02.26 மணி வரை.

மே
  பிறரை நையாண்டி செய்வதில் வல்லவரான உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் புதனும் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிட்டும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 19.05.2014 காலை 08.16 மணி முதல் 21.05.2014 காலை 10.35 மணி வரை

ஜீன்
  யாருக்கும் அடிபணியாத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயும் 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் வரும் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் தனஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவிஷயங்களிலிருந்த நெருக்கடிகள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். இம்மாதம் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் இது வரை 5,11&இல் சஞ்சரித்த ராகு கேது, மாறுதலாகி 4&இல் ராகுவும் 10&இல் கேதுவுமாக சஞ்சரிக்க விருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 15.06.2014 மதியம் 04.21 மணி முதல் 17.06.2014 மாலை 06.51 மணி வரை.

ஜீலை
    நல்ல அறிவும் சாமர்த்தியமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ண சம்மந்தப்பட்ட ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், உங்கள் ராசியாதிபதி புதன் ஆட்சிப் பெற்று அமைந்திருப்பதாலும், குரு 2&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். கொடுக்கல்&வாங்கலிருந்தப் பிரச்சனைகள் விலகி கொடுத்த  கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் லாபம் பெருகும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை பளு குறையும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 12.07.2014 இரவு 12.52 மணி முதல் 14.07.2014 இரவு 03.13 மணி வரை.

ஆகஸ்ட்
    வசீகரமான கண்களைக் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்த்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன் &மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்றாலும் சற்று சிந்தித்து செயல் படவும், பயணங்களின் போது கவனமுடனிருப்பது, வேகத்தை குறைப்பது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும், பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 09.08.2014 காலை 09.04 மணி முதல் 11.08.2014 காலை 11.29 மணி வரை.

செப்டம்பர்
  வெளி  வட்டாரங்களில் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய பண்பு கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 3&இல் சூரியனும், 6&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் இனிமையானப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். வேலை பளு குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 05.09.2014 இரவு 05.09 மணி முதல் 07.09.2014 இரவு 07.35 மணி வரை.

அக்டோபர்
  பிறரை எளிதில் வசப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு தனஸ்தானத்தில் குருவும் மாத முற்பாதி வரை செவ்வாய் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் நல்ல மேம்பாடுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இம்மாதம் சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும். 

சந்திராஷ்டமம் 03.10.2014 அதிகாலை 01.10 மணி முதல் 05.10.2013 காலை 03.39 மணி வரை.

நவம்பர்
  தர்ம குணமும், தெய்வ பக்தியும் கொண்ட உங்களுக்கு 2&இல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும், சுப காரியங்கள் கை கூடக் கூடிய அமைப்பும் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியனும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் சேரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் யாவும் குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 30.10.2014 காலை 09.15 மணி முதல் 01.11.2014 பகல் 11.48 மணி வரை.மற்றும் 26.11.2014 மாலை 05.24 மணி முதல் 28.11.2014 இரவு 07.59 மணி வரை.

டிசம்பர்
    ஆடம்பரமாக செலவு செய்வதில் அலாதிப்பிரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குரு, 6&இல் சூரியன், 10&இல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் மேன்மையடையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்&வாங்கலில் லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் சனி 6&இல் சஞ்சரிக்கும் விருப்பதால் வெற்றி மேல் வெற்றி கிட்டும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.12.2014 இரவு 01.35 மணி முதல் 26.12.2014 அதிகாலை 04.18 மணி வரை.

மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்
     ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் எப்பொழுதும் பரபரப்பாக செயல்படக் கூடிய ஆற்றல் இருக்கும். இந்த வருடத்தில் தொடக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றை சந்தித்தாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் லாபமளிக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.

திருவாதிரை
     சர்ப கிரகமான ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் முன்கோபமும், முரட்டுத்தனமும் இயல்பிலேயே இருக்கும். இந்த ஆண்டின் முற்பாதி வரை சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்டாலும், ஆண்டின் பிற்பாதியில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். செய்யும் தொழில் வியாபாரத்தை விருத்தி செய்ய இயலும். பயணங்களின் போது சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களின் பெயர் புகழ் உயரும். கடன்கள் குறையும்.

புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
    குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் நல்ல வாக்கு வன்மையும் நன்றி மறவாத குணமும் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கமானது ஏற்ற இறக்கமானப் பலன்களைக் கொடுக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், மேன்மைகள் யாவும் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். கொடுக்கல்&வாங்கல்  லாபமளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்புக்களால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷடம் அளிப்பை
எண்  5,6,8,14,15,17
நிறம்  பச்சை, வெள்ளை
கிழமை  புதன், வெள்ளி
கல்  மரகதம்
திசை  வடக்கு
தெய்வம் விஷ்ணு

பரிகாரம்
     மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13.06.2014 வரை குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப் ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது கொண்டக்கடலை மாலை சாற்றுவது நல்லது. சனி 5 இல் சஞ்சரிப்பதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும். 21.6.2014 வரை ராகு 5இல் சஞ்சரிப்பதால் துர்கை அம்மனை ராகு காலங்களில் வழிபடுவது நல்லது.

புத்தாண்டு பலன்  2014  கடகம்

கடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
     
உயர்ந்த லட்சியங்களை கொண்டவராகவும் விடா முயற்சியுடன் செயல்படுவராகவும் விளங்கும் கடக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தாகவே இருக்கும். சனி பகவான் 4&இல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன், அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். தற்போது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் வரும் 13.06.2014 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். தற்போது 4,10இல் சஞ்சரிக்கும் ராகு கேது வரும் 21.06.2014 முதல் மாறுதலாகி ராகு 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்கும் அளவிற்கு துணிவும் தைரியமும் கொடுக்கும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எதிர்பாராத சிறு சிறு உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வித தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

தேக ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாகக் கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டியிருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாவதால் மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை
  கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூமி நிலம் வண்டி வாகனம் போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கல்
  பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல் படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு
  தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்த் தேக்கம் உண்டாகாது. புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவைகளால் சிறு சிறு அனுகூலங்கள் ஏற்பட்டாலும் நிறைய அலைச்சல்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப் படும். உடல் நிலை சோர்வடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு
  பெயர் புகழ் மங்கக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்க் கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவுக் கிடைக்காது. வீண் விரயங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு
    பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இயலாது. பட்டபாட்டிற்குப் பலலின்றிப் போகும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்களுக்கு
  உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்டும். சேமிக்க முடியாது.

படிப்பு
  கல்வியில் ஞாபக மறதி ஏற்பட்டு படித்ததெல்லாம் தக்க சமயத்தில் ஞாபகத்திற்கு வராமல் போகும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுப்பதில் சிரமம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். விளையாட்டுப் போட்டிகளின் போது கவனமுடன் செயல் படுவது நல்லது.

ஸ்பெகுலேஷன்
  லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை முதலீடு செய்யாமலிருப்பதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.

ஜனவரி
    விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காணும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும், 6&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைக் காண்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும் என்றாலும் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் நற்ப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சற்றே தேக்க நிலை ஏற்பட்டாலும் லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 04.01.2014 மாலை 06.18 மணி முதல் 06.01.2014 இரவு 09.36 மணி வரை.

பிப்ரவரி
  சாந்தமும், சகிப்புத் தன்மையும், கொண்ட உங்களுக்கு ஜென்ம  ராசிக்கு 3&இல் செவ்வாயும், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படாது. கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் ஏற்பட்டாலும் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டி வரும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 01.02.2014 அதிகாலை 02.28 மணி முதல் 03.02.2014 காலை 05.38 மணி வரை.
மற்றும் 28.02.2014 காலை 10.29 மணி முதல் 02.03.2014 பகல் 01.33 மணி வரை.

மார்ச்
  உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாய், சனி ராகுவும், 8&ல் சூரியனும் சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல் படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வர வேண்டிய லாபம் குறையும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 27.03.2014 மாலை 06.26 மணி முதல் 29.03.2014 இரவு 09.23 மணி வரை.

ஏப்ரல்
  அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 9&இல் சூரியனும், 10&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். 4&இல் சஞ்சரிக்கும் சனியும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நிலைமையை சமாளித்து விட முடியும். உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் 24.04.2014 அதிகாலை 02.26 மணி முதல் 26.04.2014 காலை 05.17 மணி வரை.

மே
  எதிலும் துணிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும், 10இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் தாராளமாகவே இருக்கும். ஆடம்பர செலவுகள் செய்வதையும் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.05.2014 பகல் 10.35 மணி முதல் 23.05.2014 பகல் 01.21 மணி வரை.

ஜீன் 
  எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3இல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 4இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதும், 10இல் சுக்கிரன், கேதுவும், 11இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். இம்மாதம் 13ஆம் தேதி முதல் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 21ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 3&லும், கேது 9லும் சஞ்சரிக்க விருப்பது ஒரளவுக்கு அனுகூலத்தை உண்டாக்க கூடிய அமைப்பாகும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

ஜீலை
  எதையும் முன் கூட்டியே அறியும் திறன் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கும் 3இல் செவ்வாய் ராகுவும், 11இல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் ஒரளவுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். 12&ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. மாத பிற்பாதியில் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைப்பெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது வேகத்தைக் குறைப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 15.07.2014 அதிகாலை 03.13 மணி முதல் 17.07.2014 அதிகாலை 05.50 மணி வரை

ஆகஸ்ட்
    மிகுந்த இரக்க குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும், குருவும், சஞ்சரிப்பதாலும் 4இல் செவ்வாய் சனியும் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் நிம்மதி குறைவும், உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் வீண் பழிகளை சுமக்க வேண்டிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கலிலும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். சுப காரியங்களில் தடைகள் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 11.08.2014 காலை 11.29 மணி முதல் 13.08.2014 மதியம் 02.01 மணி வரை.

செப்டம்பர்
  அறிவும், கற்பனை சக்தியும் அதிகம் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3இல் ராகு சஞ்சரிப்பதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். மாத பிற்பாதியில் சூரியனும் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதையும் சாதித்து விடுவீர்கள். பண வரவுகளில் ஏற்றத் தாழ்வான நிலையிருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை சற்று  குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நிலையிலும் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 07.09.2014 இரவு 07.33 மணி முதல் 09.09.2014 இரவு 10.04 மணி வரை.

அக்டோபர்
  வேடிக்கையாகப் பேசக் கூடிய கலா ரசிகரான உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3இல் சூரியனும் மாத பிற்பாதியில் 6இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விட முடியும். தொழிலிலுள்ள மறைமுக எதிர்ப்புகளும் விலகும். பண வரவுகளில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும், செலவுகள் கட்டுக்குள் இருப்பதாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல் பட்டால் வீண் பழிச் சொற்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம் 05.10.2014 காலை 03.39 மணி முதல் 07.10.2014 காலை 06.04 மணி வரை.

நவம்பர்
    தன்னம்பிக்கையும், தியாக மனப்பான்மையும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறு சிறு இடையூறுகளை சந்தித்தாலும் 6ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிப்பீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற வம்வு வழக்குகள் மறையும். 4இல் சூரியன் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். உத்தியோகத்தில் வேலை பளு கூடும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 01.11.2014 பகல் 11.48 மணி முதல் 03.11.2014 மதியம் 02.11 மணி வரை
மற்றும் 28.11.2014 இரவு 07.59 மணி முதல் 30.11.2014 இரவு 10.24 மணி வரை

டிசம்பர்
  கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு 3இல் ராகுவும், மாத பிற்பாதியில் 6இல் சூரியனும் சஞ்சரிப்பது, ஒரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும் 7இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முடிந்த வரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வரும் 16ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் விருச்சிக ராசிக்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த  அர்த்தாஷ்டம சனி முழுவதும் முடிவடைகிறது. இதனால் இது வரை இருந்த அலைச்சல் டென்ஷன்கள் குறையும். அசையா சொத்துக்களால் சிறு சிறு அனுகூலங்கள் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது-.

சந்திராஷ்டமம் 26.12.2014 அதிகாலை 04.18 மணி முதல் 28.12.2014 அதிகாலை 06.38 மணி வரை.

புனர்பூசம் 4&ம் பாதம்,
    குரு பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் இருக்கும். இந்த வருடம் நீங்கள் எந்த வொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகளிலும் ஏற்ற இறக்கமான நிலையே நிலவும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதில் தடைகள் உண்டாகும். தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பூசம்
  சனி பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு எந்த வொரு பிரச்சனையையும் அலசி ஆராயக் கூடிய குணமிருக்கும். இந்த வருடம் நீங்கள் இதையே கடைபிடிக்க வேண்டியிருக்கும். பணவரவுகளில்  திருப்திகரமான நிலையிருக்காது என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடந்தும் கொண்டால் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உறவினர்களின் மூலம் ஒரளவுக்கு அனுகூலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேரிட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விட முடியும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சேமிக்க முடியாது.

ஆயில்யம்
  புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு சகல வித வித்தைகளையும் கற்றறியக் கூடிய ஆற்றலும் இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் ஒரளவுக்கு சமாளித்து விட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறு சிறு அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை 

எண் & 1,2,3,9,10,11,12,18 
நிறம் & வெள்ளை, சிவப்பு
கிழமை & திங்கள் வியாழன்
கல் & முத்து
திசை & வடகிழக்கு 
தெய்வம் & வெங்கடாசலபதி

பரிகாரம்;
    இந்த வருடத்தின் முற்பாதி வரை குருபகவான் 12லும் பிற்பாதியில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க விருப்பதால் குருப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு பரிகாரங்கள் செய்வது நல்லது. இந்த ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டம  சனி தொடருவதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது.
புத்தாண்டு பலன் & 2014 சிம்மம்  
சிம்மம் ; மகம், பூரம், உத்திரம் & 1ம் பாதம்

  உயர்ந்த எண்ணங்களுடன், பிறர் மெச்சும் படியாக வாழக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 & ஆம் ஆண்டு நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். ஜென்ம ராசிக்கு 3&ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞசாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். இந்த ஆண்டின் முற்பாதி வரை குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கைகூடும். கணவன்&--மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். ஆடை ஆபரணமும் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். வரும் 13.06.2014 முதல் குருபகவான் 12&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிக்க விருப்பதால் கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கவனமுடன் செயல்பட்டால் உடல் நிலை சிறப்பாக அமையும்.

தேக ஆரோக்கியம்;
    உடல் ஆரோக்கியத்தில் புதுத் தெம்பும் பொலிவும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமான இருப்பதால் மருத்துவ செலவுகள் யாவும் குறையும். மன நிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை;
  குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி மனை வாங்கக் கூடிய யோகங்களும் உண்டாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கொடுக்கல் வாங்கல்
  ஆண்டின் தொடக்கத்தில் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுக்கல்&வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். கடன்களும் குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் வெற்றிக் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் கொடுக்கல்&வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றமும் கிட்டும்.

அரசியல்வாதிகளுக்கு
  பெயர் புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் யாவும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் வெளி நாடுகளுக்கும் சென்று வரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வருமானம் பெருகும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியிலும் பல மானிய உதவிகள் கிடைக்கப் பெறும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் நிறைவான திருப்தி கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

பெண்களுக்கு
  உடல் நிலை அற்புதமாக இருக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளையும் தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

படிப்பு
  மாணவ மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளின் மூலம் அனுகூலம் கிட்டும்.

ஸ்பெகுலேஷன்
    லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை இந்த ஆண்டின் முற்பாதி வரை ஈடுபடுத்தலாம். பிற்பாதியில் சற்று கவனம் தேவை.

ஜனவரி
  அஞ்சா நெஞ்சமும், சிங்கம் போன்றத் துணிவும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகு சஞ்சரிப்பதாலும், மாத பற்பாதியில் சூரியன்  6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதாலும் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகள் தடையின்றிருப்பதால் கடன்கள் குறைவதோடு எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு சொந்த பூமி மனை வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களும் தடையின்றிகை கூடும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 06.01.2014 இரவு 09.36 மணி முதல் 09.01.2014 அதிகாலை 02.38 மணி வரை.

பிப்ரவரி
  அன்பும், பண்பும், தெய்வீக பக்தியும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகுவும், மாத முற்பாதி வரை 6&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் இம்மாதமும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினை அடைவீர்கள். பொருளாதார நிலை தாராளமாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குப் பிரச்சனைகளில் சுமூகமான தீர்ப்பு உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் நல்ல லாபம் கிட்டும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்திலும் நல்லதொரு லாபமும் அபிவிருத்தியும் உண்டாகும். சேமிப்பு பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 03.02.2014 அதிகாலை 05.38 மணி முதல் 05.02.2014 காலை 10.26 மணி வரை.

மார்ச்
  சூது வாது, கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகுவும், 11&இல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும், உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த உயர்வுகளும் கிட்டும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 02.03.2014 பகல் 01.33 மணி முதல் 04.03.2014 மாலை 06.08 மணிவரை
மற்றும் 29.03.2014 இரவு 09.23 மணி முதல் 01.04.2014 அதிகாலை 01.47 மணி வரை

ஏப்ரல்
  விடா முயற்சியுடன் பல சாதனைகளை செய்யக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் ராகுவும், 11&இல் குருவும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 8&ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும், உற்றார் உறவினர்களிடம் பேசும் போதும் நிதானத்தை கடைபிடிக்கவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுக்கல்&வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 26.04.2014 காலை 05.17 மணி முதல் 28.04.2014 காலை 09.30 மணி வரை.

மே
  பிறர் நலனில் அக்கரைக் கொள்ளும் நற்குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் சூரியன், 11&இல் குரு சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சனைகளையும் எதிர் கொள்ளக் கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் இன்றி லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 23.05.2014 பகல் 01.21 மணி முதல் 25.05.2014 மாலை 05.26 மணி வரை

ஜீன்
  தாராள மனப்பான்மையும் பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சூரியனும் 11&இல் குரு புதனும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் விரய ஸ்தானமான 12&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. வரும் 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்லவும். துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 19.06.2014 இரவு 09.35 மணி முதல் 22.06.2014 அதிகாலை 01.27 மணி வரை

ஜீலை
    முன் கோபியாக இருந்தாலும் இரக்ககுணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 12&இல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளையும் குறைத்துக் கொள்ளவும். 2,8&இல் ராகு கேது சஞ்சரிப்பதால் கணவன்&மனைவி அனுசரித்து நடந்து கொள்வது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 17.07.2014 அதிகாலை 05.50 மணி முதல் 19.07.2014 அதிகாலை 03.31 மணி வரை

ஆகஸ்ட்
  நியாயம் தவறாதவராகவும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும் விளங்கும் உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். ராகு கேது 2,8&இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். விரய ஸ்தானத்தில் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்க முடியும் என்றாலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. தூக்கமின்மை, அலைச்சல் டென்ஷன் போன்றவற்றால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 13.08.2014 மதியம் 02.01 மணி முதல் 15.08.2014 மாலை 05.36 மணி வரை.

செப்டம்பர்
  பிறர் மெச்சும்படியாக நடந்து கொள்ளும் உயர்ந்த பண்பு கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் எதிலும் துணிந்து செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடிய காலம் என்பதால் பண விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால்  அனுகூலம் பலனை அடைய முடியும். தேவையற்ற மருத்துவ செலவுகள் குறையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். சேமிப்பு குறையும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 09.09.2014 இரவு 10.04 மணி முதல் 12.09 2014 அதிகாலை 01.29 மணி வரை.

அக்டோபர்
  எந்த காரியத்திலும் துணிந்து ஈடுபடக் கூடிய தைரியமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், அடைய வேண்டிய லாபத்தினை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். விநாயகரை தினமும் வழிபடவும்.

சந்திராஷ்டமம் 07.10.2014 காலை 06.04 மணி முதல் 09.10.2014 காலை 09.21 மணி வரை

நவம்பர்
  எந்த கஷ்டங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2,8&இல் சர்ப கிரகங்கள் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வீண் குழப்பங்கள் உண்டாகும். 3&இல் சூரியனும் சனியும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்ளும் வேண்டி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கொடுக்கல்&வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 03.11.2014 மதியம் 02.11 மணி முதல் 05.11.2014 மாலை 05.22 மணி வரை.

டிசம்பர்
  வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு மாத பிற்பாதி வரை குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். 2,8&இல் ராகு கேதுவும் 4&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் குடும்பத்ல் தேவையற்ற பிரச்சனைகள் போன்றவை தோன்றும். தொழில் வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும். இம்மாதம் 16ம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி 4&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கவுள்ளது. இதனால் வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 30.11.2014இரவு 10.24 மணி முதல் 03.12.2014 அதிகாலை 01.26 மணி வரை மற்றும் 28.12.2014 காலை 06.38 மணி முதல் 30.12.2014 காலை 09.35 மணி வரை

மகம்
கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு வாழ்வில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் குடி கொண்டிருக்கும். இந்த வருடம் உங்களுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லாம். குடும்பத்தில் சுபிட்சமான நிலை, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற யாவும் சிறப்பாக அமையும். சிலருக்கு சொந்த பூமி மனை, வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நினைவாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் கிட்டும்.

பூரம்
  சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகு கொண்டவராக இருப்பீர்கள். இந்த வருடம் பணம் பல வழிகளில் தேடி வரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்&வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில்  நல்ல லாபம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

உத்திரம் & 1ம் பாதம்
  சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு நல்ல மன வலிமையும் உண்மை பேசும் குணமும் இருக்கும். இந்த வருடம் முழுவதும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். கொடுக்கல்&வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டம் அளிப்பவை 

எண் & 1,2,3,9,10,11,12,18
நிறம் & வெள்ளை, சிவப்பு
கிழமை & ஞாயிறு, திங்கள்
கல் & மாணிக்கம் 
திசை& கிழக்கு
தெய்வம் & சிவன்

பரிகாரம்
    சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு வரும் 13.06.2014 முதல் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, குருப் ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. 21.06.2014 முதல் ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிக்க விருப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை உண்டாக்கும்.
புத்தாண்டு பலன்  2014  கன்னி ;
கன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2,ம் பாதங்கள்
     
எப்பொழுதும் குஷியான மனநிலையுடன் செயல்படுபவராக விளங்கும் கன்னி ராசி அன்பர்களே!  உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014ஆம் ஆண்டின் முற்பாதி வரை வாழ்வில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜென்ம ராசிக்கு 2ஆம் வீட்டில் சனியும், ராகுவும் சஞ்சரிப்பதும் 8இல் கேது சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குருபகவானும் 10ஆம் வீட்டில் சஞசரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரும் 13.06.2014 முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகள் தாராளமாக அமையும். குடும்பத்திலும் திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைந்து வரவேண்டிய லாபங்கள் கைக்கு வந்து சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். வரும் 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7&லும் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தத்தினால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழுரை சனி முழுவதுமாக முடிவடைந்து விடுவதால் உங்களின் பிரச்சனைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

தேக ஆரோக்கியம்
  உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்களின் முன் கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும் குடும்பத்தில் பிரச்சனைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தை கடை பிடிக்கவும்.

குடும்பம் பொருளாதார நிலை
  கணவன்&மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், சண்டை, சச்சரவுகளும் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பிற்பாதியில் தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுப  காரியங்கள் கை கூடும். புத்திர வழியிலும் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

கொடுக்கல் வாங்கல்
  கொடுக்கல்&வாங்கலில் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடிகள் தோன்றினாலும் பிற்பாதியில் சரளமான நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். கடன்கள் நிவர்த்தியாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். நிறைய போட்டி பொறாமைகளை எதிர் கொள்ள நேரிடும். ஆண்டின் பிற்பாதியில் தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை விலகும். லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  நிம்மதி குறைவுகள், வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு பணியில் ஈடுபாடற்ற சூழ்நிலை உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்பு வோரின் விருப்பம் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு
  மக்களின் ஆதரவைப் பெறவே அரும்பாடுபட வேண்டியிருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். ஆண்டின் பிற்பாதியில் உங்களுக்குள்ள வம்பு பிரச்சனைகள் யாவும் விலகி லாபம் பெருகும். உழைப்பிற்கேற்ற அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

பெண்களுக்கு
    உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் எதிலும் ஒற்றுமையுடன் செயல் பட முடியும். பொன் பொருள் யாவும் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகங்களும் உண்டாகும். புத்திர பாக்கியமும் ஏற்பட்டு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

படிப்பு
  கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கிய பாதிப்புகளால் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும், பிற்பாதியில் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாரட்டுதல்களை பெறுவீர்கள்.

ஸ்பெகுலேஷன்
  லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் ஆண்டின் முற்பாதியை விட பிற்பாதியில் தான் அனுகூலங்கள் உண்டாகும்.

ஜனவரி
  நல்ல ஞாபக சக்தியும், நிதானமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் செவ்வாயும், 2இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பது குடும்பத்தில் நிம்மதி குறைவை உண்டாக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். 10இல் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் பணவரவுகள் ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தினை அடைவீர்கள். கொடுக்கல்&வாங்கலும் திருப்தியளிப்பதாக அமையும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 09.01.2014 அதிகாலை 02.38 மணி முதல் 11.01.2014 காலை 09.59 மணி வரை

பிப்ரவரி
  பிறரை வசீகரிக்கும் பேச்சுத் திறன் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 2இல் சனி ராகு சஞ்சரிப்பதால் கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் தொழில் வியாபார ரீதியாக அனுகூலங்களைப் பெறுவீர்கள். 10இல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதால் பணம் பல வழிகளில் தேடி வரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 05.02.2014 காலை 10.26 மணி முதல் 07.02.2014 மாலை 05.33 மணி வரை

மார்ச்
  பொறுமை, கன்னியம்,கட்டுப்பாட்டுடன் செயல்படக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5இல் சுக்கிரனும், 6இல் சூரியனும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படாது. குருவும் வக்ர கதியிலிருப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியுடன் செயல் படமுடியும். 2இல் செவ்வாய் சனி ராகு சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பதும், தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பதும் நல்லது. இம்மாதம் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 04.03.2014 மாலை 06.08 மணி முதல் 06.03.2014 இரவு 12.57 மணி வரை

ஏப்ரல்
  பிறரை வசீகரிக்கும் பேச்சுத் திறன் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2இல் சனியும் ராகுவும், 7இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வீண் விரயங்களும் ஏற்படும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 01.04.2014 அதிகாலை 01.47 மணி முதல் 03.04.2014 காலை 08.19 மணி வரை. மற்றும் 28.04.2014 காலை 09.30 மணி முதல் 30.04.2014 மதியம் 03.51 மணிவரை

மே
  எதிலும் பிறரை கலந்தாலோசித்து செயல் படக் கூடிய உங்களுக்கு 2ஆம் வீட்டில் சனியும் ராகுவும், 8இல் சூரியன் கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன்&மனைவியிடையேயும் வீண் வாக்கு வாதங்கள் சண்டை சச்சரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வீண் விரயங்களை எதிர் கொள்ள வேண்டி வரும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்திலும் சற்று மந்த நிலை ஏற்படும். னுந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. பணியில் வேலை பளு அதிகரிக்கும். சிவனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 25.05 2014 மாலை  05.26 மணி முதல் 27.05.2014 இரவு 11.34 மணிவரை

ஜீன்
  தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும் 2இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. இது வரை 10&இல் சஞ்சரிக்கும் குரு வரும் 13ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். வரும் 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் இது வரை 2,8 இல் சஞ்சரித்த ராகு கேது, ராகு ஜென்ம ராசியிலும், கேது 8லும் சஞ்சரிக்கவுள்ளனர், இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. துர்கை அம்மனை வழிபடுவது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் 22.06.2014 அதிகாலை 01.27 மணி முதல் 24.06.2014 காலை 07.22 மணி வரை

ஜீலை
    பிறரின் நலன் அறிந்து செயல் படக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு ஏழுரை சனி தொடர்ந்தாலும் 10இல் சூரியன் புதனும், 11இல் குருவும் சஞ்சரிப்பதால் கடந்த கால  பிரச்சனைகள் யாவும் படிப்படியாக விலகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்&வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் சி-று சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. இம்மாதம் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 19.07.2014 காலை 09.34 மணி முதல் 21.07.2014 மதியம் 03.15 மணி வரை.

ஆகஸ்ட்
    பேச்சிலும், செயலிலும் பிறரை புண் படுத்தாத நற்குணம் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11&இல் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். பணி புரிபவர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பாராட்டுதல்களையும், உயர்வுகளையும் பெற முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.08.2014 மாலை 05.38 மணி முதல் 17.08.2014 இரவு 10.59 மணி வரை

செப்டம்பர்
  சூழ்நிலைக்கு தக்கவாறு  தன்னை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு 2இல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 12இல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும், உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குரு லாப ஸ்தானத்தில்  சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் ஏற்பட்டு குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம் 12.09.2014 அதிகாலை 01.29 மணி முதல் 14.09.2014 காலை 06.39 மணி வரை.

அக்டோபர் 
  தன் கடமைகளிலிருந்து தவறாமல் பாடுபடும் உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும், 3இல் செவ்வாயும், 11இல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் கிட்டும். பொருளாதாரமும் உயரும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். புதிய பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்லுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீட்டிற்கேற்ற லாபத்தினை அடைய முடியும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 09.10.2014 காலை 09.21 மணி முதல் 11.10.2014 மதியம் 02.21 மணி வரை.

நவம்பர்
    எதையும் எளிதில் கற்றறியும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு லாபஸ்தானத்தில் குரு சஞ்சரிபப்பதால் இம்மாதத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மாத பிற்பாதியில் சூரியனும் 3ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதிலும் துணிவுடனும், தைரியத்துடனும் செயல்பட முடியும். கொடுக்கல்&வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது. தொழில் வியாபாரத்திலுருந்த போட்டிகள் விலகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 05.11.2014 மாலை 05.22 மணி முதல் 07.11.2014 இரவு 10.08 மணி வரை

டிசம்பர்
    மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியன் சஞ்சரிப்பது 11&இல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பாகும். இதனால் அனுகூலமானப் பலன்களையே பெறுவீர்கள். இம்மாதம் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஏழரைச் சனி முடிவடைந்து விடும். சனி 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாவதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு கொடுக்கல்&வாங்கலிலும் நல்ல லாபம் கிட்டும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். இம்மாதம் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 03.12.2014 அதிகாலை 01.26 மணி முதல் 05.12.2014 காலை  05.58 மணி வரை மற்றும் 30.12.2014 காலை 09.35 மணி முதல் 01.01.2015 பகல் 01.58 மணி வரை.

உத்திரம் 2,3,4ம் பாதங்கள்
    சூரியனின் நட்சததிரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு அனுபவ அறிவு அதிகமிருக்கும். இந்த வருடத்தின் முற்பாதி வரை குடும்பத்தில் பிரச்சனைகள், தொழில் வியாபார ரீதியாக போட்டிகளை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு, எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை மேன்மையடைவதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். கொடுக்கல்&வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். பணியிலிருந்த நெருக்கடிகள், பிரச்சனைகள் குறையும்.

அஸ்தம்
    சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பரோபகார சிந்தனையும், இரக்க குணமும் இருக்கும். இந்த ஆண்டின் முற்பாதியில் நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாவதுடன் உடல் நிலையும் பாதிப்படையும். ஆண்டின் பிற்பாதியில் உங்களுக்குள்ள பிரச்சனைகளிலிருந்து படிப்படியான முன்னேற்றங்கள் உண்டாகி பொருளாதாரமும் உயர்வடையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் உயர்வுகளும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிட்டும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

சித்திரை 1,2ம் பாதங்கள்
  செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு நடைமுறைக்கேற்றவாறு நடந்து கொள்ளக் கூடிய பண்பு இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிர் பார்க்கும் உதவிகளும் தக்க சமயத்திற்கு கிடைக்காமல் போகும். எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் வாழ்வில் முன்னேற்றமும், தாராள தனவரவும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  4,5,6,7,8
நிறம்  பச்சை, நீலம் 
கிழமை  புதன், சனி
கல்  மரகத பச்சை 
திசை  வடக்கு
தெய்வம் ஸ்ரீ விஷ்ணு

பரிகாரம்
    கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனியில் பாத சனி தொடருவதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, தொடர்ந்து ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது. சர்ப கிரகங்களான ராகு கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. குரு பகவான் 13.06.2014 வரை 10&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

புத்தாண்டு பலன்  2014 துலாம்  துலாம் ; சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3 &ம் பாதங்கள்
     
எதிலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட துலா ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த 2014 ஆம் ஆண்டின் முற்பாதி வரை குருபகவான் 9&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணவரவுகள் தாராளமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்ம  சனி நடைபெறுவதும், ஜென்ம ராசியில் ராகுவும் 7&இல் கேதுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 10&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதி குறைவு உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பற்ற தன்மையால் வேலை பளுவும் அதிகரிக்கும். 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றல் உண்டாகும். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 சனி 2&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்கும்.

தேக ஆரோக்கியம்
    இந்த ஆண்டு முழுவதிலும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாக கூடிய மருத்துவ செலவுகளாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடக் கூடிய வலிமையும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை
    ஆண்டின் முற்பாதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நற்பலனை தரும்.

கொடுக்கல் வாங்கல்
  ஆண்டின் முற்பாதிவரை பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாக கூடும் என்பதால் கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறியான நிலை நீடிக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு
    இந்த ஆண்டின் முற்பாதிவரை தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானித்து செயல் படவும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு 
  இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் இடமாற்றங்கள் யாவும் கிடைக்கப் பெறுவதுடன் பணியிலும் நிம்மதியாக செயல்பட முடியும். ஆண்டின் பிற்பாதியில் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் வீண் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு
    மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களின் ஆதரவுகளைப் பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதோடு உடல் நிலையும் சோர்வடையும். பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபட வேண்டியிருக்கும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி வரும். எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கா விட்டாலும், போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும்.

பெண்களுக்கு
  உடல் நிலையில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் எந்த வொரு காரியத்திலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. சேமிப்பும் குறையும்.

படிப்பு
  கல்வியில் சற்று மந்த நிலை ஞாபக மறதி போன்றவை ஏற்பட்டாலும் வரவேண்டிய மதிப்பெண்கள் தடையின்றி வரும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நட்பு வட்டாரங்களையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தடை தாமதங்களுக்கு பின் கிடைக்கும்.

ஸ்பெகுலெஷன்
  இந்த ஆண்டின் முற்பாதியில் லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பிற்பாதியில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது.

ஜனவரி
  பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ஆம் வீட்டில் இம்மாத முற்பாதி வரை சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். திருமண சுப காரியங்கள் சிறு சிறு தடைகளுக்குப் பின் கைகூடும். ஜென்ம ராசியில் சனி ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குரு பாக்கிய ஸ்தானத்திலிருந்தாலும் வக்ர கதியிலிருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல் படுவது நல்லது. விரய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத விரயங்கள் பூமி மனையால் பிரச்சனைகள் ஏற்படும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 11.01.2014 காலை 09.59 மணி முதல் 13.01.2014 இரவு 07.47 மணி வரை.

பிப்ரவரி
  அனைவரையும் எளிதில் மயங்கிடச் செய்யும் வசீகரத் தோற்றம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனியும் ராகுவும், 4&இல் சூரியனும் 12&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் இம்மாதம் உடல் ஆரோக்கியத்திலும்,  உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்றப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குருவும் வக்ர கதியிலிருப்பதால் பணவரவுகளிலும் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது, குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி இருக்காது. ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 07.02.2014 மாலை 05.33 மணி முதல் 10.02.2014 அதிகாலை 03.04 மணிவரை.

மார்ச்
  நேர்மையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சனி ராகு சஞ்சரிப்பதால் பயணங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. 4&ஆம் வீட்டில் சுக்கிரனும், மாத பிற்பாதியில் 6&இல் சூரியனும் 9&இல் குருவும் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமணம் போன்ற சுப காரிங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதி நிலவும். இம்மாதம் சனி ப்ரீதி, ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 06.03.2014 இரவு 12.57 மணி முதல் 09.03.2014 காலை 10.13 மணி வரை

ஏப்ரல்
  சிறந்த பேச்சாற்றலும், வாக்கு வன்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சூரியனும், 9&இல் குருவும் சஞ்சரிப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமும், புத்திர வழியில் பூரிப்பும் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் நல்ல லாபத்தினை அடைய முடியும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. முருகப் பெருமானை வழி படுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 03.04.2014 காலை 08.19 முதல் 05.04.2014 மாலை 05.25 மணி வரை.

மே
    எக்காரியத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 9&இல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகளும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். ஆடை ஆபரணம் சேரும். 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். கொடுக்கல்&வாங்கல் திருப்தியளிக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 30.04.2014 மதியம் 03.51 மணி முதல் 02.05.2014 இரவு 12.42 மணி வரை.
மற்றும் 27.05.2014 இரவு 11.34 மணி முதல் 30.05.2014 காலை 08.07 மணி வரை.

ஜீன்
  மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ, வெளிகாட்டாத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி ராகுவும், 8&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுடன், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 10&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத இடமாற்றங்கள், தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். இம்மாதம் 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 24.06.2014 காலை 07.22 மணி முதல் 26.06.2014 மதியம் 03.43 மணி வரை.

ஜீலை
    கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, ஜென்ம சனி தொடருவதும், 10&இல் குரு சஞ்சரிப்பதும் செவ்வாய் 12&இல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டு தான் முன்னேற வேண்டியிருக்கும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலைச்சல்களும் அதிகரிக்கும். சேமிப்பும் குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.07.2014 மதியம் 03.15 மணி முதல் 23.07.2014 இரவு 11.21 மணி வரை.

ஆகஸ்ட்
    பிறரை கேலி கிண்டல் செய்வதில் வல்லவரான உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் பயணங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 9&இல் சுக்கிரனும் 10&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றங்களும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கடன்கள் உண்டாகாமல் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் நிலையில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும். காரியங்களில் கவனம் தேவை. இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 17.08.2014 இரவு 10.59 மணி முதல் 20.08.2014 காலை 06.48 மணி வரை.

செப்டம்பர்
  பிறரது ஆலோசனைகளை எளிதில் ஏற்றுக் கொள்ளாத மனம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும் 11&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் காரியங்களை முடித்து விடக் கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்ற படி அமையும். குடும்பத்திலுள்ளவர்களிடம் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 14.09.2014 காலை 06.39 மணி முதல் 16.09.2014 மதியம் 02.14 மணி வரை

அக்டோபர்
    தோல்வியை கண்டு துவளாத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனியும் 2&இல் செவ்வாயும், 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.  உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் தேவையற்ற பழச்சொற்களை சந்திக்க நேரிடும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 11.10.2014 மதியம் 02.21 மணி முதல் 13.10.2014 இரவு 09.38 மணி வரை

நவம்பர்
  வெளியில் ஒளிவு மறைவின்றி பேசக் கூடிய மனப்பான்மை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும் 6&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் கடந்த காலப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அனுகூலங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றிகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவிஷயங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் 07.11.2014 இரவு 10.08 மணி முதல் 10.11.2014 அதிகாலை 05.08 மணி வரை.

டிசம்பர்
  உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு. ஜென்ம ராசியில் சனியும் 4&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். இம்மாதம் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜென்ம ராசிக்கு 2&இல் சஞ்சரிக்கவிருப்பதால் ஏழரை சனியில் பாதசனி தொடங்குகிறது. இதனால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் ஏற்படும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு வெற்றி கிட்டும். 6&இல் கேது சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமை உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 05.12.2014 காலை 05.58 மணி முதல் 07.12.2014 மதியம் 12.46 மணி வரை.

சித்திரை 3,4 ம் பாதங்கள்
  செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் எப்பொழுதும், குடிகொண்டிருக்கும். இந்த வருடத்தில் ஏழரைசனியில் ஜென்ம சனி தொடருவதால் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தொழில் வியாபாரம் செய்பவர் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பபது நல்லது. கொடுக்கல்&வாங்கலிலும் கவனம் தேவை.

சுவாதி
  ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு சற்று முன் கோபம் இருந்தாலும் எதையும் தந்திரமாக சாதிப்பீர்கள். இந்த ஆண்டின் முற்பாதிவரை நல்ல பொருளாதார மேன்மையும் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஆண்டின் பிற்பாதியில் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள், வீண் பழிச் சொற்கள் உண்டாகும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். பணம் கொடுத்தால் திரும்பப் பெற முடியாமல் போகும். உடன் பழகுபவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது.

விசாகம் 1,2,3 ம் பாதங்கள்

  குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு மற்றவரை எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய சுபாவம் இருக்கும். இந்த ஆண்டின் முற்பாதியில் எல்லா வகையிலும் ஏற்றங்களையும் உயர்வுகளையும் அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்து சேர்க்கைகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆண்டின் பிற்பாதியில் தொழில் வியாபாரம் உத்தியோகம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாதிருப்பது பணியில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 4,5,6,7,8 
நிறம் &வெள்ளை, பச்சை
கிழமை & வெள்ளி, புதன்
திசை & தென் கிழக்கு
கல் & வைரம்
தெய்வம் & லட்சுமி

பரிகாரம்
  துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. வரும் 13.06.2014 முதல் குரு 10&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நற்பலனை தரும். வரும் 21.06.2014 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7&ஆம் சஞ்சரிக்கவிருப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. 
புத்தாண்டு பலன்  2014 விருச்சிகம்

விருச்சிகம் ; விசாகம் &4ம் பாதம், அனுஷம், கேட்டை

  நகைச்சுவையுணர்வும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி தொடருவதால் தேவையற்ற விரயங்கள், எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குருவும் ஆண்டின் முற்பாதி வரை அஷ்டம ஸ்தானமான 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களாலும், குடும்பத்திலுள்ளவர்களாலும் மன சஞ்சலங்கள் ஏற்படும். கேது பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். வரும் 13.06.2014 முதல் குரு பகவான் பாக்கியஸ்தானமான 9&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். வரும் 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது சாதகமான அமைப்பே ஆகும். இதனால் தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் பெருகும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கவுள்ளது.

தேக ஆரோக்கியம்
  உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு போன்றவை உண்டாகினாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல் படும் அளவிற்கு ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை
  இந்த ஆண்டின் முற்பாதிவரை தேவையற்ற பிரச்சனைகள், கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், எல்லாம் இருந்தும் அனுபவிக்கத் தடைகள் போன்றவை ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுப காரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகி சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் அசையும் அசையா சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
  ஆண்டின் முற்பாதி வரை பணவரவுகளில் இடையூறுகள், நெருக்கடிகள் ஏற்படும். தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தாராள தனவரவுகளைக் கொடுக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  இந்த ஆண்டின் முற்பாதி வரை தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது. பிற்பாதியில் ஒரளவுக்கு முன்னேற்றத் பெறுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் சிறப்பான அபிவிருத்தியும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் தேவையற்ற குழப்பங்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் இவற்றால் மன உளைச்சல்கள் போன்றவை ஏற்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக விலகும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள், இடமாற்றங்கள் போன்றவை கிடைக்கப் பெறும். புதிய வேலைத் தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு
  ஆண்டின் முற்பாதியில் கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய  சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலையில் மேம்பாடுகள் உண்டாகி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எதிர்பாராத உயர் பதவிகளும் கிடைக்கும். பெயர், புகழ் உயரும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் நீர் வரத்து குறையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

பெண்களுக்கு
  உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். ஆண்டின் பிற்பாதியில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். பொருளாதாரம் உயரும்.

படிப்பு
  கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்களும், அவமானபடக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

ஸ்பெகுலேஷன்
  ஆண்டின் முற்பாதியில் எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிற்பாதியில் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைந்து விட முடியும்.

ஜனவரி
நகைக்சுவை உணர்வுடன் பேசக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, ஏழரை சனி நடைபெறுவது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 8&இல் சஞ்சரிக்கும் குருவும் வக்ரகதியிலிருப்பதால் பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பயணங்களில் நிதானம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம் 13.01.2014 இரவு 07.47 மணி முதல் 16.01.2014 காலை 07.13 மணி வரை.

பிப்ரவரி
  வாக்கு வாதங்களில் வாதிக்கும் திறமைக் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியனும், 4&இல் புதனும், 6&இல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் திறமையுடன் செயல்பட்டு லாபத்தினைப் பெற முடியும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 10.02.2014 அதிகாலை 03.04 மணி முதல் 12.02.2014 மதியம் 02.22 மணி வரை.

மார்ச்
  பிடிவாத குணமும், முரட்டுத்தனமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் சூரியனும், 8&இல் குருவும், 12&இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் இம்மாதம் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று தேக்க நிலை ஏற்பட்டாலும் மந்த நிலை உண்டாகாது. முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 09.03.2014 காலை 10.13 மணி முதல்  11.03.2014 இரவு 09.25 மணி வரை.

ஏப்ரல்
  பார்ப்பதற்கு வெகுளிப் போல தோற்றமளிக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும் 12&இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலும் இருப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொள்ள கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில்  நிம்மதியுடன் செயல் படமுடியும். கொடுக்கல்&வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபத்தினை பெற்று விட முடியும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 05.04.2014 மாலை 05.25 மணி முதல் 08.04.2014 அதிகாலை 4.28 மணி வரை.

மே
  விளையாட்டுத் துறைகளில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும், சூரியனும்  சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகி எல்லா வகையிலும் லாபம் பெரும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். சொந்த பூமி, மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் சற்றே குறையும். கொடுக்கல்&வாங்கலும் லாபமளிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைய முடியும். கடன்களும் குறையும். குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 02.05.2014 இரவு 12.42 மணி முதல் 05.05.2014 மதியம் 11.37 மணி வரை.
மற்றும் 30.05.2014 காலை 08.07 மணி முதல் 01.06.2014 இரவு 06.56 மணி வரை.

ஜீன்
  எடுக்கும் காரியங்களை திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும், 11&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதாலும், 12&இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதாலும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். இம்மாதம் 13&ஆம் தேதி முதல் குரு 9&இல்  சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். 21&ஆம் தேதி முதல் ராகு 11&இல் சஞ்சரிக்க விருப்பதால் கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 26.06.2014 மதியம் 03.43 மணி முதல் 29.06.2014 அதிகாலை 02.20 மணி வரை.

ஜீலை
  எளிதில் யாராலும் ஏமாற்ற இயலாத துணிவு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குரு 9&இல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மாத முற்பாதி வரை செவ்வாய் 11&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபம் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.07.2014 இரவு 11.21 மணி முதல் 26.07.2014 காலை 09.42 மணி வரை.

ஆகஸ்ட்
  குறும்புத் தனமும், விஷமத் தனமும் அதிகம் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி நடைபெற்றாலும், 9&இல் குருவும், 11&இல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வித பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபத்தினை அள்ளித் தரும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 20.08.2014 காலை 06.48 மணி முதல் 22.08.2014 மதியம் 05.02 மணி வரை.

செப்டம்பர்
  பிறரது குற்றங் குறைகளை எளிதில் அம்பலப் படுத்தக் கூடிய தைரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் குருவும் 11&இல் புதன் ராகுவும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களிலிருந்த வம்பு வழக்குகளில் அனுகூலப் பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும். எதிர்பாராத சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டாலும் சேமிப்பு குறையாது. உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றத்தை பெற முடியும். இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 16.09.2014 மதியம் 02.14 மணி முதல் 18.09.2014 இரவு 12.12 மணி வரை.

அக்டோபர்
  தன்னை விடப் பெரியவர்களிடம் அதிக மரியாதையுடன் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரித்தாலும் 9&இல் குருவும், 11&இல் சூரியன், சுக்கிரன் ராகுவும் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பொன் பொருள் சேரும். அசையா சொத்து யோகங்களும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 13.10.2014 இரவு 09.38 மணி முதல் 16.10.2014 காலை 07.19 மணி வரை.

நவம்பர்
  நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் 10.11.2014 அதிகாலை 05.08 மணி முதல் 12.11.2014 மதியம் 02.40 மணி வரை.

டிசம்பர்
  தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும், 9&இல் குருவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் உண்டாகும் என்றாலும் ஜென்ம ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதாலும் வரும் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனியும் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய விருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கடன்களும் குறையும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். எதிலம் சிந்தித்து செயல் படுவது நல்லது. சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 07.12.2014 மதியம் 12.46 மணி முதல் 09.12.2014 இரவு 10.02 மணி வரை.

விசாகம் &4ம் பாதம்,
  குரு பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் நியாய அநியாயங்களை தெளிவாக எடுத்துரைப்பீர்கள். இந்த வருடத்தில் உங்களுக்கு தேவையற்ற சோதனைகள், வேதனைகள் உண்டாகி மனசஞ்சலங்களை ஏற்படுத்தும் என்றாலும் இவ்வருடத்தின் பிற்பாதியில் ஒரளவுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும், பொருட்தேக்கம்  உண்டாகாது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வை அடையலாம்.

அனுஷம்
    சனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஏதாவது மனக் குறைகள் இருந்து கொண்டே இருக்கும். இந்த வருடமும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்றாலும் எதிர் பாராத உதவிகள் கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்தாலும் சிறு சிறு அலைச்சல்களையும் எதிர் கொள்ள நேரிடும். பயணங்களில் சற்று கவனமுடன் இருப்பது வேகத்தை குறைப்பது நல்லது.

கேட்டை
  புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தான தர்மங்கள் செய்யும் குணம் இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் எந்தவொரு கரியத்திலும் சிந்தித்து செயல் படுவதே நல்லது. ஆண்டின் முற்பாதி வரை சில சங்கடங்களை சிந்தித்தாலும், பிற்பாதியில் நல்ல பல முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும்.  குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் &1,2,3,9,10,11
நிறம் &  ஆழ் சிவப்பு, மஞ்சள்
கிழமை & செவ்வாய், வியாழன்
திசை & தெற்கு
கல் & பவளம்
தெய்வம்& முருகன்

பரிகாரம்
  விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் எள் எண்ணெயில் தீப மேற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. 13.06.2014 வரை குரு 8&இல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. 21.06.2014 முதல் கேது 5&இல் சஞ்சரிக்கவிருப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
புத்தாண்டு பலன்  2014 தனுசு

தனுசு; மூலம், பூராடம், உத்திராடம் & 1ம் பாதம்
     
கள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 & ஆம் ஆண்டு உங்களின் பெயர், செல்வம், செல்வாக்கு புகழ் போன்ற அனைத்தையும் உயர்த்தும் ஆண்டாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7இல் குருபகவான் ஆண்டின் முற்பாதி வரை சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சனியும் ராகுவும் 11இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபங்கள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் லாபம் உண்டாகும். கொடுக்கல்-&வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவார்கள். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 8ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014இல் ஏற்படவுள்ள சாப் கிரக மாற்றத்தால் கேது 4ஆம் வீட்டிலும் ராகு 10ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கவுள்ளனர். இதனால் சிறு சிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலங்களும் உண்டு. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இவ்வருட இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் ஏழரைசனியில் விரய சனி தொடங்கவுள்ளது.

தேக ஆரோக்கியம்
  
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்திலுள்ளவர்களும் மருத்துவ செலவுகளின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

  கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும் எதிர் பாராத உதவிகளும் கிட்டும்.

கொடுக்கல்&வாங்கல்

  ஆண்டின் முற்பாதியில் பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும் பிற்பாதியில் பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமான பலன் கிட்டும்.

தொழில் வியாபாரிகளுக்கு

  தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

    பணியில் கௌரமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

  உங்களின் பெயர் புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆண்டின் பிற்பாதியில் மேடை பேச்சுகளில் கவனமுடனிருப்பது மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

விவசாயிகளுக்கு

  பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்களும் நடைபெறும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

பெண்களுக்கு

  உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.

படிப்பு

  கல்வியில் முதன்மை பெற்று விளங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர், வெளி நாடுகளுக்கு சென்று பணி புரிய கூடிய வாய்ப்பும் உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

ஸ்பெகுலேஷன்

  லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் ஆண்டின் முற்பாதியில் நல்ல லாபம் கிடைக்கும். பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது.

ஜனவரி

  எதையும் எளிதில் கிரகிக்கும் தன்மை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 10இல் செவ்வாயும், 11இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் வலிமையும் உண்டாகும். 7இல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 16.01.2014 காலை 07.13 மணி முதல் 18.01.2014 மாலை 06.48 மணி வரை.

பிப்ரவரி

  ஒழுக்கமும், நெறி தவறாத பண்பும் கொண்ட உங்களுக்கு 7இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரித்தாலும் 10இல் செவ்வாயும் 11இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களும் பணியில் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 12.02.2014 மதியம் 02.22 மணிமுதல் 15.02.2014அதிகாலை 01.59 மணிவரை

மார்ச்
  முன் கோபியாக இருந்தாலும், கள்ளம் கபடமில்லாத குணம் கொண்ட உங்களுக்கு 3&இல் சூரியனும், 11இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றயிருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அனுகூலப் பலனை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலிருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்கள் யாவும் வசூலாகும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 11.03.2014 இரவு 09.25 மணி முதல் 14.03.2014 காலை 09.05 மணி வரை.

ஏப்ரல்

  அவசர குணமிருந்தாலும் எதையும், திருத்தமாக செய்து முடிக்கும் குணம் கொண்ட உங்களுக்கு, சம சப்தம ஸ்தானமான 7&இல் குரு சஞ்சரிப்பதால் திருமண சுப காரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களால் இருந்த பிரச்சனைகள் விலகும். 10&இல் செவ்வாயும் 11&இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு  பணியில் உயர்வுகள் கிடைக்கப் பெறுவதோடு, திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிட்டும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். தொழில் வியாபாரமும் அபிவிருத்தி அடையும். கடன்கள் யாவும் குறையும். சனி ப்ரீதி, ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது

சந்திராஷ்டமம் 08.04.2014 அதிகாலை 03.19 மணி முதல் 10.04.2014 மாலை 04.09 மணி வரை

மே
  எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7இல் குருவும், 10இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களும் திறம்பட செயல்படும் ஆற்றலும் உண்டாகும். கௌரவம் புகழ் யாவும் உயரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியான அளிப்பதாக அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 05.05.2014 மதியம் 11.37 மணி முதல் 07.05.2014 இரவு 11.20 மணி வரை.

ஜீன்

  அறிவாற்றலும், தீர்க்க தரிசனமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6இல் சூரியனும் 7இல் குருவும் சஞ்சரிப்பதால் பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, எந்த வித  எதிர்ப்புகளையும் எதிர் கொள்ளும் வல்லமை உண்டாகும். வரும் 13ம் தேதி ஏற்படவுள்ள குருமாற்றத்தால் குரு 8ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது. வரும் 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 4&லும் ராகு 10&லும் சஞ்சரிக்கவிருப்பதால் ஒரளவுக்கு சுமாரான பலனைப் பெற முடியும். அசையா சொத்துக்களால் வீண் விரயம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 01.06.2014 இரவு 06.56 மணிமுதல் 04.06.2014 காலை 06.38 மணி வரை.மற்றும் 29.06.2014அதிகாலை 02.20 மணிமுதல் 01.07.2014 மதியம் 02.02 மணி வரை

ஜீலை
  தவறு செய்பவர்களை, மன்னிக்கும் சுபாவம் கொண்டே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். மாத பிற்பாதியில் 11 லுள்ள சனி வக்ர நிவர்த்தியடைவதாலும், செவ்வாய் 11&இல் சஞ்சரிக்க விருப்பதாலும் தொட்டதெல்லாம் துலங்கும். குரு 8&இல் சஞ்சரித்தாலும் பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். கணவன்&மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழில் வியாபாரம் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் வர வேண்டிய லாபம் வரும் சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 26.07.2014 காலை 09.42 மணி முதல் 28.07.2014 இரவு 09.24 மணி வரை.

ஆகஸ்ட்
  தாம் கற்றணுர்ந்ததை பிறருக்கு போதிக்கும் சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&இல் சூரியன் குரு சஞ்சரித்தாலும் 11&இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 22.08.2014 மாலை 05.02 மணி முதல் 25.08.2014 அதிகாலை 04.37 மணி வரை.

செப்டம்பர்
  உதாரண குணமும், தர்ம சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும் 10&இல் புதன் ராகுவும், 11&இல் செவ்வாய் சனியும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மேன்மையும் உண்டாகும். தொழில் வியாபாரரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் லாபங்கள் சிறப்பாக அமையும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்பதியுடன் செயல்பட முடியும். வேலை பளுவும் குறையும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 18.09.2014 இரவு 12.12 மணி முதல் 21.09.2014 பகல் 11.41 மணி வரை.

அக்டோபர்
    சுய நலம் பாராமல் எதையும் துணிந்து செய்யக் கூடிய உங்களுக்கு ஜீவன ஸ்தானமான 10&இல் சூரியன் சுக்கிரனும், 11&இல் புதன் சனியும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. 12இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அசையா சொத்துக்களால் வீண் அலைச்சல் விரயம் போன்றவை ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடைபெறும். போட்டி பொறாமைகளை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெறா விட்டாலும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 16.10.2014 காலை 07.19 மணி முதல் 18.10.2014 மாலை 06.39 மணி வரை.

நவம்பர்
  எல்லா இடங்களிலும் வாதிக்கும் திறமை  கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும், 8&இல் குருவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. லாப ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் சனி போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எந்த இடையூறுகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் முன்னேற்றங்கள் உண்டாகும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 12.11.2014 மதியம் 02.40 மணி முதல் 15.11.2014 அதிகாலை 01.58 மணி வரை.

டிசம்பர்

  வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் செவ்வாய், 8&இல் குரு, 12&இல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்&மனைவியிடையே  வீண் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும். 10&இல் ராகுவும், 11&இல் சனியும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட முடியும். இம்மாத பிற்பாதியில் ஏற்படக் கூடிய சனி மாற்றத்தினால் சனி பகவான் விரய ஸ்தானமான  12இல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரை சனி தொடங்கவிருப்பது குறிப்பிடதக்கது. எனவே எதிலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. சனி ப்ரீதி, ஆஞ்ச நேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 09.12.2014 இரவு 10.02 மணி முதல் 12.12.2014 காலை 09.11 மணி வரை.

மூலம்
  கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் இயற்கையிலேயே இருக்கும். இந்த வருடம் முழுவதும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தினை பெற முடியும். திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும்.

பூராடம்
  சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்துள்ள உங்களுக்கு கனிவான பார்வையால் அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆற்றல் உண்டாகும். இந்த வருடம் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கொடுக்கல்&வாங்கலிலும் லாபம் கிட்டும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர் பார்த்த லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களால் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெற முடியும். ஆண்டின் பிற்பாதியில் பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உத்திராடம் 1&ம் பாதம்
  சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் அதிகமிருக்கும். இந்த ஆண்டு உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார நிலையும் மிக சிறப்பாக இருக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களும் கைக்கூடும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவுகள் குறையும்.

அதிர்ஷடம் அளிப்பவை,

எண் & 1,2,3,9,10,11,12 
கிழமை & வியாழன், திங்கள்
திசை & வடகிழக்கு
நிறம் & மஞ்சள், பச்சை
கல் & புஷ்ட ராகம்
தெய்வம் & தட்சிணா மூர்த்தி

பரிகாரம்
    தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு வரும் 13.06.2014 முதல் குருபகவான் 8&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.

புத்தாண்டு பலன் & 2014- மகரம்
மகரம் ; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்
     
ஆக்கும் சக்தியும், அழிவதை தடுக்கும் சக்தியும் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014&ஆம் ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அவ்வளவு சாதகமானதாக இருக்காது. குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், கேது 4&லும், சனி,ராகு 10&லும் சஞ்சாரம் செய்வதாலும் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைந்து கொண்டால் கடன்களின்றி வாழ முடியும். வரும் 13.06.2014 &இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 7&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குரும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்&வாங்கலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். வரும் 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் இடமாற்றங்கள் யாவும் சிறு சிறு தடைகளுக்குப் பின் கிட்டும். இந்த வருட இறுதியில் 16.12.2014 &இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

தேக ஆரோக்கியம்
  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும் குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளாலும் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
  இந்த ஆண்டின் தொடக்கம் சற்று சோதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். உறவினர்களிடையே ஒற்றுமை குறைவு, கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடு, பொருளாதார நிலையில் இடையூறு போன்றவை உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் ஒரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். பொருளாதார முன்னேற்றங்களால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் கை கூடி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கல்
  ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்க்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் நற்பலன் ஏற்பட்டு அபிவிருத்தியை பெருக்க முடியும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சனைகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். சிலருக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.

அரசியல்வாதிகளுக்கு
  பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளிலும் இடையூறுகளை சந்திக்க நேரிடும். ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு நற்பலன்களை எதிர் பார்க்க முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.

பெண்களுக்கு
  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பிற்பாதியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதால் அமையும்.

படிப்பு

கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில எதிர் பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் அசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.

ஸ்பெகுலேஷன்

  ஆண்டின் தொடக்கத்தில் ஷேர் லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பிற்பாதியில் நற்பலனை அடைய முடியும்.

ஜனவரி

  ஈனை குணமும், உதாரண குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதும், 9&இல் செவ்வாய் சஞ்சரிப்பம் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். பண வரவுகள் தேவைக் கேற்ற படியிருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். பூமி மனை போன்றவற்றாலும் சிறு சிறு லாபங்கள் அமையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். இம்மாதம் சனிக்கு பரிகாரம் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 18.01.2014 மாலை 06.48 மணி முதல் 21.01.2014 காலை 04.56 மணி வரை.

பிப்ரவரி

  நண்பர்களிடமும், விரோதிகளிடமும் சமமாக பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். 6&இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் பண வரவுகள் சரளமாக இருக்கும். 9&ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கை கூடும் அமைப்பு, கடன்கள் குறையக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்றே கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலையாட்களில் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை அளிக்கும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.02.2014 அதிகாலை 01.59 மணி முதல் 17.02.2014 பகல் 12.18 மணி வரை

மார்ச்

  எதையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியன் 10&இல் செவ்வாய் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சரளமாகவே இருக்கும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமும், சுப காரிய முயற்சிகளில் அனுகூலமும், கணவன்&மனைவியிடையே ஒற்றுமையும் நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறு சிறு போட்டிகள் பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். உத்தியோகத்திலும் கவனமுடன் செயல்படுவது நற்பலனை தரும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் 14.03.2014 காலை 09.05 மணி முதல் 16.03.2014 மாலை 07.34 மணி வரை.

ஏப்ரல்

  எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் மனம் தளராத உங்களுக்கு, மாத முற்பாதி வரை சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெற முடியும். பணவரகளில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்திலிருந்தப் போட்டிகள் சற்று குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 10.04.2014 மாலை 04.09 மணி முதல் 13.04.2014 அதிகாலை 02.52 மணி வரை.

மே

  உழைப்பையே தெய்வமாக கருதும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் சூரியனும், 6&இல் குருவும் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள், பிரச்சனைகள் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. செவ்வாய் 9&இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் திறமைக்கேற்ற உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். இம்மாதம் சிவபெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும். 

சந்திராஷ்டமம் 07.05.2014 இரவு 11.20 மணி முதல் 10.05.2014 பகல் 10.13 மணி வரை.

ஜீன்
    பிடிவாத குணம் இருந்தாலும் வீண் பிடிவாதம் இல்லாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 7&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது சிறப்பாகும். இதனால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். சுப காரியங்கள் கை கூடும். வரும் 21 ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் உண்டாகும். துர்கை அம்மனை வழிபடுவது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் 04.06.2014 காலை 06.38 மணி முதல் 06.06.2014 மாலை 05.40 மணி வரை.

ஜீலை  
  எடுத்துக் கொண்ட காரியத்தில் கண்ணாக செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சூரியனும் 7&இல் குருவும் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வரும். எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொண்டு வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் விலகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கடன்கள் குறையும். மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 01.07.2014 மதியம் 02.02 மணி முதல் 04.07.2014 அதிகாலை 01.13 மணி வரை.மற்றும் 28.07.2014 இரவு 09.24 மணி முதல் 31.07.2014 காலை 08.40 மணி வரை.-

ஆகஸ்ட்
  தேவையற்ற கோபமோ, மனசஞ்சலமோ கொள்ளாத குணம் கொண்ட உங்களுக்கு 3&இல் கேதுவும், 7&இல் குருவும், 10&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூமி மனை வண்டி வாகனம் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். செல்வம் செல்வாக்கு உயரும். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 25.08.2014 அதிகாலை 04. 37 மணி முதல் 27.08.2014 மதியம் 03.59 மணி வரை.

செப்டம்பர்
    எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டாலும் எளிதில் சமாளிக்க கூடிய  ஆற்றல் கொண்ட உங்களுக்கு 7&ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும் என்றாலும் 8&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்தவ செலவுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களும் உயர்வடைய முடியும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.09.2014 பகல் 11.41 மணி முதல் 23.09.2014 இரவு 11.10 மணி வரை.

அக்டோபர்

  எதிலும் சிறிது பெரிது என வித்தியாசம் பாராமல் செயல்படும் உங்களுக்கு 3&இல் கேதுவும், 7&இல் குருவும், 11&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கலும் திருப்தியளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும். கூட்டாளிகளாலும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். கடன்களும் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும். ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 18.10.2014 மாலை 06.39 முதல் 21.10.2014 காலை 06.20 மணி வரை.

நவம்பர்

  வாக்கு சாதுர்யம் படைத்த உங்களுக்கு 9&இல் சூரியனும்,11&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் லாபங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். பயணங்களால் லாபங்கள் கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.11.2014 அதிகாலை 01.58 மணி முதல் 17.11.2014 மதியம் 01.25 மணி வரை.

டிசம்பர்
    தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு 7&இல் குருவும், 11&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. மாதபிற்பாதியில் 12&இல் சுக்கிரனும், சூரியனும் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாகவும் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்றாலும் இம்மாத பிற்பாதியில் ஏற்படக் கூடிய சனி மாற்றத்தால் சனி பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களும் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் ஏற்படும். அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 12.12.2014 காலை 09.11 மணி முதல்14.12.3014 இரவு 08.51 மணி வரை.

உத்திராடம் 2,3,4ம் பாதங்கள்,

  சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு நல்ல மனவலிமையும், வைராக்கியமும் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும். தேவையற்ற வம்பு வழக்குகளும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எதிலும் ஒரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். பண விஷயத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கை கூடும். பொன்னும் பொருளும் சேரும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

திருவோணம்

  சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு எல்லோருக்கும் உதவ கூடிய பரந்த மனப்பான்மை இருக்கும். இந்த வருடத்தின் தொடக்கம் உங்களுக்கு அனுகூலமானப் பலனைத் தராது என்பதே உண்மை என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற பயணங்களையும் தவிர்க்கவும். ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் விலகி கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபங்களும் உண்டாகும். கடன்கள் யாவும் குறையும்.

அவிட்டம் 1,2ம் பாதங்கள்

  செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் உங்கள் பேச்சாற்றலால் எதிரிகளை ஓட ஒட விரட்டுவீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். எதிர்பார்த்து காத்திருக்கும் உதவிகளும் தாமதமடையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடும். பொருளாதார மேம்பாடுகளால் செல்வம் செல்வாக்கும் உயரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலப் பலனை அடைய முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 8,5,6,17,14,15 
கிழமை & சனி புதன் 
திசை & மேற்கு
நிறம் & நீலம், பச்சை
கல் & நீலக்கல்
தெய்வம் &ஐயப்பன்

பரிகாரம்
  மகர ராசியில் பிறந்துள்ள  உங்களுக்கு வரும் 13.06.2014 வரை குரு பகவான் 6&ஆம்  வீட்டில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10&இல் சஞ்சரிப்பதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும் வரும் 21.06.2014 வரை கேது 4லும் ராகு 10&லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்க்கொள்வது நற்பலனை உண்டாக்கும்.
புத்தாண்டு பலன்  2014  கும்பம்  கும்பம் ; அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள்

  வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014&ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேது 3&ல் சஞ்சரிப்பதும், குரு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு முழுவதும் சனி 9&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சம், கணவன்&மனைவியிடையே ஒற்றுமை, எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி போன்றவை உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபமும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உயர்பதவிகள் கிட்டும். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளார். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். வரும் 21.06.2014 முதல் சர்ப கிரகங்களான கேது 2&லும் ராகு 8&லும் சஞ்சரிக்க விருப்பதால் கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகளையும், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும், உறவினர்களிடையே வீண் பகைமையையும் உண்டாக்கும். இந்த வருட இறுதியில் 16.12.2014 &இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10&இல் சஞ்சரிக்க விருப்பது குறிப்பிட தக்கது.

தேக ஆரோக்கியம்
  உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். ஏதாவது சிறு சிற பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ள பெரியவர்களால் சற்றே மருத்துவ செலவுகள் உண்டாகலாம். ஆண்டின் பிற்பாதியில் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாவதால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை
  இந்த ஆண்டின் தொடக்கமானது எல்லா வகையிலும் ஏற்றத்தைத் தருவதாக அமையும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். திருமண சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். உற்றார்  உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் சிறு சிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நற்பலனை தரும்.

கொடுக்கல் வாங்கல்
    பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்&வாங்கலும் திருப்தியளிப்பதாக அமையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  இந்த ஆண்டின் தொடக்கம் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தினை  உண்டாக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சனைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சாதிக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மகிழ்ச்சியளிக்கும் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு
  ஆண்டின் முற்பாதியில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். கட்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலையில் சிறப்பாக இருக்கும். ஆண்டின் பிற்பாதியில் உடன் பழகுபவர்களிடம் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது பண விரயங்களும் சற்று அதிகரிக்கும் சேமிப்பு குறையும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் எதிர் பார்த்த படி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடைய முடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்க கூடிய யோகம் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பூமி மனை போன்றவற்றால் உறவினர்களிடையே பகைமை ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு
  உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். குடும்பத்திலும் ஒற்றுமை, சுபிட்சம் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும் புதிய வீடு கார் போன்றவற்றையும் வாங்குவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும் ஆடம்பர செலவுகளையும் குறைக்கவும்.

படிப்பு
  கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளையும், பாராட்டுதல்களையும் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகளையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியிலும் ஆதரவு கிட்டும்.

ஸ்பெகுலேஷன்
  ஆண்டின் தொடக்கத்தில் ஷேர்,லாட்டரி,ரேஸ் போன்றவற்றில் லாபம் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

ஜனவரி
    இயற்கையான விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவரான உங்களுக்கு 5&இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 9&இல் சனியும் ராகுவும், 10&இல் சூரியன் புதனும் சஞ்சாரம் செய்வதால் தொழில்,வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் லாபம் அமையும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.01.2014 காலை 04.56 மணி முதல் 23.01.2014 மதியம் 12.39 மணி வரை.

பிப்ரவரி
    தன்னை கேலி கிண்டல் செய்பவர்களை தண்டிக்கும் குணம் கொண்ட உங்களுக்கு இம்மாதம் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 8&இல் செவ்வாய் 12&இல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளால் மனநிம்மதி குறையும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக தானிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம் 17.02.2014 பகல் 12.18 மணி முதல் 19.02.2014 இரவு 08.17 மணி வரை.

மார்ச்
    புரட்சிகரமான தீர்மானங்களை கொண்ட உங்களுக்கு 3&இல் கேதுவும், 5&இல் குருவும் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் தடைபட்ட மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சியும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெற்று மேன்மையளிக்கும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் 16.03.2014 இரவு 07.34 மணி முதல் 19.03.2014 காலை 03.51 மணி வரை.

ஏப்ரல்
  எடுக்கும் முயற்சிகளில் அயராது பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் கேதுவும், 5&இல் குருவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்து யோகமும் உண்டாகும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் யாவும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றமும், கூட்டாளிகளால் அனுகூலமும் உண்டாகும். சேமிப்பும் பெருகும். சனி ப்ரீதி, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 13.04.2014 அதிகாலை 02.52 மணி முதல் 15.04.2014 பகல் 11.21 மணி வரை.

மே
    எதிலும் ஆலோசித்து செயல்படக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியனும் 5&இல் குருவும் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும் என்றாலும் உறவினர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றி வாகை சூடுவார்கள். அதிகாரிகளின் பாராட்டுதல்களும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்&வாங்களில் சரளமான நிலையிருக்கும். முருகனை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் 10.05.2014 பகல் 10.13 மணி முதல் 12.05.2014 மாலை 06.52 மணி வரை

ஜீன்
    எதிலும் மன உறுதியுடன் பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு  3&இல் கேதுவும், 9&இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபத்தினைப் பெறுவீர்கள். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளார். இதனால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 2லும் ராகு 8&லும் சஞ்சரிக்கவிருப்பதால் கணவன்&மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 06.06.2014 மாலை 05.40 மணி முதல் 09.06.2014 காலை 02.41 மணி வரை

ஜீலை
  மற்றவர்களை கூர்ந்து கவனித்து செயல்படக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் சுக்கிரனும் 9&இல் சனியும் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள் என்றாலும் 2&இல் கேதுவும் 8&இல் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 04.07.2014 அதிகாலை 01.13 மணி முதல் 06.07.2014 பகல் 10.29 மணி வரை மற்றும் 31.07.2014 காலை 08.40 மணி முதல் 02.08.2014 மாலை 06.09 மணி வரை.

ஆகஸ்ட்
  அனைவரிடமும் சர்வ சாதரணமாக பழக கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சூரியனும் 9&இல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொண்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளையும் சமாளிக்க முடியும். சற்றே மந்த நிலை ஏற்பட்டாலம் பொருட் தேக்க மின்றி சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இம்மாதம் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 27.08.2014 மதியம் 03.59 மணி முதல் 30.08.2014 அதிகாலை 01.41 மணி வரை.

செப்டம்பர்
  பொது நலத்திற்கு பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6&இல் குருவும் 7&இல் சூரியனும், 8&இல் ராகுவும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. 9&இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடக் கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் கடன்களின்றி சமாளிக்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலை சோர்வடையும். சிவபெருமானை வழிபடுவது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் 23.09.2014 இரவு 11.10 மணி முதல் 26.09.2014 காலை 09.07 மணி வரை.

அக்டோபர்
  பிறர் வாழ்க்கையில் குறுக்கிடாத பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் கேது, 6&இல் குரு, 8&இல் சூரியன் சுக்கிரன் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் கணவன்&மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். சுப காரியங்களில் தடை உண்டாகும். பொருளாதார நிலையிலும் தட்டுப்பாடுகள் நிலவுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் நிலையும் பாதிப்படையும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.10.2014 காலை 06.20 மணி முதல் 23.10.2014 மதியம் 04.27 மணி வரை.

நவம்பர்
  தான் கற்றதை சமயமறிந்து செயல்படுத்தும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்தாலும், 9&இல் சூரியனும், 11&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலுள்ள நெருக்கடிகள் குறையும். கணவன்&மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைக்கவும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் தான் நடைபெறும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 17.11.2014 மதியம் 01.25 மணி முதல் 19.11.2014 இரவு 11.59 மணி வரை.

டிசம்பர்
  மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு 6&இல் குரு 8&இல் ராகு, 12&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பண வரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பயணங்களிலும் வேகத்தை குறைப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்14.12.2014 இரவு 08.51 மணி முதல் 17.12.2014 காலை 07.29 மணிவரை.

அவிட்டம் 3,4,ம் பாதங்கள்
    செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் உலகமே தலைகீழாக கவிழ்ந்தாலும் வருத்தப்படமாட்டீர்கள். இவ்வருடத்தின் முற்பாதிவரை தாராள தன வரவுகளும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளும் கிட்டும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவுவதால் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்&மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும்.

சதயம்
    ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் நல்ல உடல் வாகும், உழைத்து வாழும் திறனும் இருக்கும். இந்த வருடத்தின் முற்பாதி உங்களுக்கு சாதகமான இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்&வாங்கலும் லாபமளிக்கும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடப்பது, உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள்.

பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள் 
  குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் பரந்த மனப்பான்மையுடன் காணப்படுவீர்கள். இந்த ஆண்டின் முற்பாதி உங்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் உண்டாகும். பணவரவுகளிலும் திருப்திகரமான நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கும் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதுடன் மன நிம்மதியும் குறையும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். சேமிப்பும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  5,6,8,14,15,17
கிழமை  வெள்ளி, சனி
திசை  மேற்கு
நிறம்  வெள்ளை, நீலம் 
கல்  நீலக்கல்,
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்
    கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு வரும் 13.06.2014 முதல் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. 21.06.2014 முதல் சர்ப கிரகங்களான கேது 2லும் ராகு 8லும் சஞ்சரிக்க விருப்பதால் சர்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
புத்தாண்டு பலன்  2014 மீனம்  மீனம் ; பூரட்டாதி & 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
     
அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 2&இல் கேதுவும், 4&இல் குருவும், 8&ஆம் வீட்டில் ராகுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இது மட்டுமின்றி சனியும் 8&இல் சஞ்சரிப்பதால் அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். வரும் 13.06.2014இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்தக்களால் அனுகூலங்களும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தர கூடிய சம்பவங்களும் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும். 21.06.2014 &இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7&லும் சஞ்சரிக்கவிருப்பதால் கணவன்-&மனைவி விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. நண்பர்களும் விரோதிகளாக மாறுவார்கள். இந்த வருட இறுதியில் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அஷ்டம சனி முழுவதும் முடிவடைந்து விடுவதால் வாழ்வில் நல்ல பல முன்னேற்றங்களை அடைய முடியும்.

தேக ஆரோக்கியம்

  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். கை கால் மூட்டுகளில் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவையும் உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க இயலாமல் போகும். குடும்பத்திலுள்ளவர்களும் நிம்மதியின்றி இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

  இந்த ஆண்டின் தொடக்கம் அவ்வளவு சாதகமானதாக இருக்கும் என்று கூற முடியாது. வீடு,வாகனம் போன்றவற்றால் வீண் செலவுகள் ஏற்படும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க தடையை கொடுக்கும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். கணவன்&மனைவியிடையேயும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். திருமண சுப காரியங்களும் கை கூடும்.

கொடுக்கல் வாங்கல்

    ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால்  கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியிலிருந்து பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்கு பிரச்சனைகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

  தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். ஆண்டின் பிற்பாதியில் எதிலும் சற்று ஆறுதலைப் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அலைச்சல்கள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

  பணியில் வேலை பளு அதிகரிக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வீண் பழிச்சொற்களும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் சம்பள உயர்வுகளும் தாமதப்படும். ஆண்டின் பிற்பாதியில் பணியில் ஒரளவுக்கு நிம்மதியான நிலையினை அடைய முடியும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.

அரசியல்வாதிகளுக்கு

  பெயர் புகழ் மங்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது. மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பயணங்களாலும் அலைச்சல் அதிகரிக்கும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளுக்கு பஞ்சம்  இருக்காது. மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும்.

விவசாயிகளுக்கு

    பயிர் விளைச்சல்  சுமாராகத் தானிருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படும். தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காததால் அறுவடையில் தாமதம் உண்டாகும். விளை பொருளுக்கேற்ற  விலையினை சந்தையில் பெற முடியாமல் போகும். ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். அரசு வழியிலும் ஆதரவுகள் கிட்டும்.

பெண்களுக்கு

  உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். கடன்கள் குறையும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது. உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது. மிகவும் நற்பலனை உண்டாக்கும்.

படிப்பு

  கல்வியில் சற்று ஈடுபாடற்ற நிலை ஞாபகமறதி, உடல் நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கல்விக்காக சிலருக்கு அலைச்சல்கள் உண்டாகும். நல்ல நட்புக்களாக தேர்ந்தெடுத்து பழகுவது மூலம் அனுகூல பலனை அடையலாம்.

ஸ்பெகுலேஷன்

    லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் ஆண்டின் பிற்பாதியில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும்.

ஜனவரி

  கவர்ச்சியான முகத்தோற்றத்தை கொண்ட உங்களுக்கு, இம்மாத முற்பாதியில் சூரியன் 10&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாக இருக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள்  இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.01.2014 மதியம் 12.39 மணி முதல் 25,01.2014 மாலை 06.00 மணி வரை.

பிப்ரவரி
    கம்பீரமான உடலமைப்பைக் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் காரியங்களிலும் லாபங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். கணவன்&மனைவியிடையே உண்டாக கூடிய வாக்கு வாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 19.02.2014 இரவு 08.17 மணி முதல் 22.02.2014 அதிகாலை 01.53 மணி வரை.

மார்ச்
  கனிந்த பார்வையும், மலர்ந்த முகமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&இல்  சனி, 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களிடம், உறவினர்களிடமும் பேச்சில் கவனமுடனிருப்பது நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 19.03.2014 அதிகாலை 03.51 மணி முதல் 21.03.2014 காலை 09.38 மணி வரை.

ஏப்ரல்

  வெகு சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட கூடிய உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 7&இல் செவ்வாயும், 8&இல் சனி ராகுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் முடிந்த வரை உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களை அடைய முடியும் என்றாலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சேமிக்க முடியாது. குருப்ரீதி, தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.04.2014 காலை 11.21 மணி முதல் 17.04.2014 மாலை 05.22 மணி வரை.

மே
  சமயத்திற்கேற்றார் போல வளைந்து கொடுத்து வாழக் கூடிய உங்களுக்கு இம்மாதமும் உங்களுக்கு சற்று சோதனைகள் நிறைந்தாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர்பாராத உதவிகள் மூலம் முன்னேற்றத்தை பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையினை அடைய முடியும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிக்கவும். ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 12.05.2014 மாலை 06.52 மணி முதல் 15.05.2014 அதிகாலை 01.16  மணி வரை.

ஜீன்
    நீதி நேர்மை தவறாமல் வாழும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். இம்மாதம் 13&ம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் பஞ்சம் ஸ்தானமான 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்திலிருந்த பண பிரச்சனைகள் விலகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் தடபுடலாக நிறைவேறும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். வரும் 21 ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7&லும் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் 09.06.2014 அதிகாலை 02.41 மணி முதல் 11.06.2014 காலை 09.13 மணி வரை.

ஜீலை
    எதிலும் விட்டு கொடுத்து வாழும் மனோபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகுவும், 4&இல் சூரியனும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் 5&இல் குரு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்து வழியில் லாபங்கள், அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். இம்மாதம் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 06.07.2014 பகல் 10.29 மணி முதல் 08.07.2014 மாலை 05.14 மணி வரை.

ஆகஸ்ட்
     வெகு சீக்கிரத்தில் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக கூடிய குணம் கொண்ட உங்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் குருவும் 6&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எந்த வித எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். தாராள தன வரவுகளால் கொடுக்கல்-&வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பொன் பொருள் சேரும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். எதிர் பாராத உதவிகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவும் குறையும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 02.08.2014 மாலை 06.09 மணி முதல் 05.08.2014 அதிகாலை 01.09 மணி வரை.மற்றும் 30.08.2014 அதிகாலை 01.41 மணி முதல் 01.09.2014 காலை 08.58 மணி வரை.

செப்டம்பர்
    தாராள குணமும், தயாள குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5&இல் குருவும், 6&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொண்டால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். பயணங்களில் போது வேகத்தை குறைப்பது நல்லது. உறவினர்களால் சிறு சிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிப்பீர்கள். முருகனை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 26.09.2014 காலை 09.07 மணி முதல் 28.09.2014 மாலை 04.37 மணி வரை.

அக்டோபர்

     நல்ல கற்பனைத் திறன் கொண்ட உங்களுக்கு 5&இல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் 7&இல் சூரியனும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பாதிக்கும். உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உடல் நிலையிலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். மாத பிற்பாதியில் செவ்வாய் 9&இல் சஞ்சரிப்பதால் சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.10.2014 மதியம் 04.27 மணி முதல் 25.10.2014 இரவு 12.17 மணி வரை.

நவம்பர்

     தன்னை நம்பியவர்களுக்கு உதவும் மனோ பாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5&இல் குருவும் 10&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் உயர்வுகள் கிட்டும். பொருளாதார மேம்பாடுகளால் செல்வம் செல்வாக்கு உயரும். 8&இல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்&மனைவியிடையே வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் நிலையிலும் பாதிப்புகள் ஏற்படும். கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 19.11.2014 இரவு 11.59 மணி முதல் 22.11.2014 காலை 08.05 மணி வரை.

டிசம்பர்
     புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 5&இல் குருவும் 9&இல் சுக்கிரனும், 11&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இம்மாதம் தொட்டதெல்லாம் துலங்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். செல்வம் செல்வாக்கு உயரும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வரும் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அஷ்டம சனி முழுவதும் முடிவடைந்துவிடுவதால் உடல் நிலையிலும் நல்ல மேன்மைகள் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 17.12.2014 காலை 07.29 மணி முதல் 19.12.2014 மாலை 03.48 மணி வரை.

பூரட்டாதி& 4ம் பாதம்
குரு பகவானின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் இருக்கும். இந்த வருடத்தின் தொடக்கம் உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது என்பதால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். சேமிப்பும் பெருகும்.

உத்திரட்டாதி
    சனியின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றக் கூடிய ஆற்றல் இருக்கும். இந்த வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் முன்னேற்றம் இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வு கிட்டும்.

ரேவதி
  புதனின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அரிய சாதனைகளை செய்வீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் பிரச்சனைகள் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் உங்களுக்குள்ள பிரச்சனைகள் யாவும் விலகும். கடன்களும் குறையும். புதிய பூமி மனை சேரும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  1,2,3,9,10,11,12
கிழமை  வியாழன், ஞாயிறு
திசை  வடகிழக்கு
நிறம்  மஞ்சள், சிவப்பு
கல்  புஷ்ப ராகம்
தெய்வம்  தட்சிணா மூர்த்தி

பரிகாரம்
    மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. சர்ப கிரகங்களான ராகு&கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்கை வழிபாடு சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. வரும் 13.06.2014 வரை குரு 4&இல் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.